சென்னையில் கிராம உதவியாளர்கள் பணி.. லட்டு மாதிரி வந்த சான்ஸ்! உடனே அப்ளை பண்ணுங்க! விட்றாதீங்க
சென்னை: தமிழகம் முழுக்க மாவட்ட வாரியாக கிராம உதவியாளர் (Chennai Village Assistant posts - TN Job) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி மாவட்ட வாரியாக கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி, நிரப்புவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 21 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பின் விவரங்களை பார்க்கலாம்.

கிராம உதவியாளர் பணியிடங்கள்
சென்னை மாவட்ட வருவாய் அலகில், வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள மொத்தம் 20 கிராம உதவியாளர் பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக பணி நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டம் வாரியாக நியமனம் செய்யப்படவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை (ம) இன சுழற்சி விவரம் அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும்.
மேற்படி பணிக்கான விண்ணப்பத்தினை https://chennai.nic.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து 01.09.2025 முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், 01.10.2025 மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பப்பட வேண்டும்.
மேலும், கிராம உதவியாளர் பணியிடத்திற்கான காலிப்பணியிட விவரம், கல்வித்தகுதி, இதரத்தகுதிகள் மற்றும் இனச்சுழற்சி குறித்த விவரங்களை https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப்பள்ளி இறுதி (பத்தாம் வகுப்பு) தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
பிறதகுதிகள்
1. விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும் வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
2. தமிழில் பிழையின்றி வாசித்தல் மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த அக்கிராம பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4. உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
5. மிதிவண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
6. விண்ணப்பதாரர் மீது எவ்வித வழக்கு நிலுவையில் இருக்க கூடாது.
வயது வரம்பு (01.09.2025 படி)
குறைந்தபட்ச வயது - 21 வயது, அதிகபட்ச வயது 32 (அனைத்து பிரிவினருக்கும்)
(இதர வகுப்பினர் - 37 வயது - பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் /பட்டியலினத்தவர் / பழங்குடியினர். மாற்றுத்திறனாளிகளுக்கு - அதிகபட்ச வரம்புடன் 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் மேற்படி பணிக்கான விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவண இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
(சிறப்பு காலமுறை ஊதியம்) லெவல் 06 படி - (ரூ.11,100 - 35,100/-) வழங்கப்படும்.
நிபந்தனைகள்
விண்ணப்பங்கள் எவ்வகையிலும் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளுக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்படாது. தமிழ் வழியில் படித்தவர்களாக இருந்தால் தமிழ் வழி கல்வி சான்று சமர்ப்பிக்க வேண்டும். கிராம உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வில் இன சுழற்சி விதிகள் பின்பற்றப்படும்.
தகுதியான விண்ணப்பதார்களுக்கு மட்டும் மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும்திறன், வாசித்தல் / எழுதுதல், திறனறித் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றிற்கு தனித்தனியே கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
25×10 அளவுள்ள அஞ்சல் உறையில் ரூ.25/-க்கான அஞ்சல் வில்லையை ஒட்டி தற்போதைய சுயவிலாசத்தை விண்ணப்பத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் அனைத்து சான்றுகளிலும் சுயசான்றொப்பம் (Self Attested) செய்திருக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications