தூக்கம் கண்ணைக் கட்டுதா.. வாங்க "கடி"க்கலாம்...!
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.. மணி 3 க்கு மேல் ஆனாலும் கூட தூக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கும் பலருக்கும்...
எப்படியாப்பட்ட தூக்கத்தையும் கடி ஜோக்ஸ் கடித்துக் குதறி விட்டு வி்டும்...
வாங்க கொஞ்சம் போல கடிச்சுக்கலாம்...
பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.
அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....!
என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...
பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே.. ஏன்....???
குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....
என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....!
பேப்பர் போடுறவன் பேப்பர் காரன். பால் போடுறவன் பால்காரன். தபால் போடுறவன் தபால்காரன்.... அப்போ பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா?
என்னதான் நீங்க அகிம்சாவாதியாக இருந்தாலும், அமைதியை நேசிப்பவராக இருந்தாலும்.... சப்பாத்தியைச் "சுட்டு"த்தான் சாப்பிடனும்.
என்ன தான் "திமுக" காரர்கள் மாடுகளுக்குச் செல்லம் கொடுத்து ஆசை ஆசையாய் வளர்த்தாலும், அது "அம்மா" என்று தான் கத்தும்...!
ரயில் எவ்வளவு தான் வேகமாகப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாகத் தான் போகும்.
உப்பு விக்க போனா மழை பெய்யுது. மாவு விக்க போனா காத்தடிக்குது என்று புலம்புவதை விட்டு விட்டு இரண்டையும் கலந்து போண்டா சுட்டால் எல்லா சீசனுக்கும் விற்கும்....!!!!!!!!!!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications