குழந்தை நீதி கதைகள்: கனா காண்கிறேன் கனா காண்கிறேன்- நான் தூங்கும் இளவரசி
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், நா மறுபடியும் வந்துட்டா. நமக்கு எல்லாம் தூங்கும் போது கனவு வரும்ல நம்ம கதைல ஒரு பொண்ணு கனவு காண்றதுக்கே தூங்குறாங்க. அவங்கள பத்தி பாக்கலாமா. ஒரு விஷயம் மனசுல வெச்சுக்கோங்க. வாழ்க்கைல நெறைய கனவு காணுங்க. அதுக்காக பயணிக்க ஒரு பாதை அமைச்சுக்கோங்க. ஒரு நாள் கண்டிப்பா அது நடக்கும், இப்போ கதையை பாப்போம் வாங்க.
முன்னொரு காலத்துல ஒரு சின்ன ராஜ்ஜயம் இருந்தது. அங்க ஒரு சின்ன குடிசை வீடு இருந்தது. அதுல ஒரு அழகான ஏழை பொண்ணு இருந்தாங்க. அங்க இருந்த விலங்குகள் பறவைகள் எல்லாருக்கும் அவங்கள புடிக்கும். இன்னொரு பக்கம் அந்த ராஜ்ஜயத்தோட இளவரசி தன்னை அவங்கள விட அழகாய் காட்டிக்க நெனச்சாங்க. அவங்க அழகுல மயங்கி அந்த பக்கம் போன இளவரசர் அவங்க கல்யாணம் பண்ணிக்க நெனச்சாங்க. அவரு கல்யாணம் பண்ணது அந்த ஏழை பொண்ண தா. இளவரசரும் அந்த அழகான பொண்ணும் மாஜிக் லேண்ட்ல கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அவங்க இளவரசர் குதிரைல மாஜிக் லேண்ட் அ சுத்தி வந்தாங்க.

இது ரியல் கதை இல்ல. இது தா எப்பவும் தூங்கும் இளவரசி காணும் கனவு. தூங்கும் இளவரசியோட உண்மையான பெயர் கரோல். அவங்க ஒரு அழகான நகரத்துல வசிக்கறாங்க. அவங்க ஏழ்மையான குடும்பம் இல்ல. ஆனால் அழகான தோற்றம் உள்ளவங்க. இவங்க வாழ்க்கைல இரண்டு குறிக்கோள்தா. ஒன்னு தூங்கறது, இன்னொன்னு கனவு காண்றது. ஒருநாள் காலைல நல்ல குளிச்சுட்டு அவங்க தூங்கிக்கொண்டு இருந்தாங்க. அப்போ அவங்க அப்பா வந்து,"கரோல் எழுந்துரு. இப்படியா தூங்கிக்கொண்டு இருப்பாங்க. இதனாலதா உன்னோட நண்பர்கள்ல உன்ன "ஸ்லீப்பின்ட்ரல்ல" னு கூப்படறாங்கனு சொல்லி கத்துறாரு. தனது இளவரசரை பத்தி கனவு கண்டு கொண்டிருந்த கரோல். திடீரென தூக்கத்துல இருந்து முழிக்கறாங்க. தனது அப்பாவிடம்,"என்னை தூக்கத்துல இருந்து எழுப்ப உங்களுக்கு உரிமை இல்லை" னு கோபமா சொல்லிட்டு வெளிய போய்டுறாங்க.அவங்களுக்கு எப்போவும் அழகான இளவரசை கல்யாணம் பண்ணிக்கற மாறி கனவு வரும். ஒரே ஆண்மகன் முகம் தான் அவங்களுக்கு திரும்ப வந்து கொண்டே இருக்கும். அவரோட அவங்க நகரத்தை மகிழ்ச்சியா சுத்தி வருவாங்க. கரோல் எங்கேயும் எப்போவும் கனவு காணுவாங்க. ஒரு பார்ட்டிக்கு போனாலும் கனவு காணுவாங்க, நண்பர்களோட வெளிய போனாலும் கனவு காணுவாங்க, எதாவது துக்க நிகழ்ச்சிக்கு போனாலும் கனவு காணுவாங்க. இதனால கரோலோட அம்மா ரொம்ப வருத்தப்பட்டங்க. நகரத்துல இருக்க நெறைய மருத்துவர்களை வெச்சு வைத்தியம் பாத்துட்டாங்க. அவங்க சொல்றது ஒரே ஒரு பதில் தான். "உங்க பொண்ணு ஒரே சோம்பேறி இருக்காங்க. அவங்க குணப்படுத்துவது கஷ்டம்". இத கேட்டு கரோல் ஓட அப்பாக்கும் ரொம்ப வருத்தம். கரோல் எப்போவும் தூங்கிட்டே இருக்கனாலா. அந்த நகரத்துல ரொம்ப பிரபலம் ஆனாங்க.
ஒருநாள் கரோல் அவங்க அப்பா அம்மா கூட கடைக்கு போயிருந்தாங்க .
கரோலை பார்த்த கடைக்காரர்," என்ன ஸ்லீப்பின்ட்ரல்ல, உனக்கு தூக்கத்துல நடக்கற வியாதியா னு கேலி செய்றார். அதற்கு கரோல், ஆமா நா உங்க கடைல பொருள் வாங்கிட்டு பணம் தராம போய்டுவா. அப்போ எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்குனு விட்ருவீங்கல்ல" னு கோபமா பேசிட்டு அந்த இடத்தை விட்டு தள்ளிபோறாங்க. இப்படி நகரத்துல நெறைய பேர் தூங்கும் இளவரசிய கேலி செய்வாங்க. அவங்களும் இந்த மாறி கடுமையா பேசி அந்த இடத்தை விட்டு நகர்ந்துருவாங்க. இந்த செயல்கள் கரோல் ஓட அப்பா அம்மா வை கவலையடைய செய்தது. தனது மகளுக்கு சரி ஆகணும்னு தினமும் இறைவனை பிரதிப்பாங்க.
ஒருநாள் வழக்கம் போல கரோல் வீடு வேலைய செஞ்சுட்டு இருக்கும் போது ,
அவங்க நண்பர்கள், "ஹாய் ஸ்லீப்பின்ட்ரல்ல. பக்கத்து அரண்மனைல இன்னைக்கு இரவு ஒரு விருந்து நடக்குது. நீ அதுக்கு வந்தாய் என்றால் உன்னோட இளவரசரை நேர்ல பார்க்கலாம் இல்லையா?" னு கேட்டார்கள். கரோல் சந்தோசமாக, "நான் கண்டிப்பா இரவு அங்கு வரேன் னு " சொல்ராங்க. தனது அப்பா அம்மாவிடம் அனுமதி பெற்று ஒரு துணி கடையில அழகான டிரஸ் வாங்கி போட்டுக்கிட்டு கிளம்ப தயாராகுறாங்க. கரோலை கூட்டி செல்ல வண்டி வீட்டுக்கு வெளிய நின்னுட்டு இருந்துச்சு. வண்டியில் பெரியவர் ஒருவர் காத்துக்கொண்டிருந்தார். கரோலுக்கு அந்த வண்டியோட தோற்றம் புதுமையாக இருந்தது.
வண்டிக்காரரை கூப்பிட்டு, "இந்த வண்டி "பூசணிக்காய் வடிவத்தில் இருக்கே னு" கேட்டாங்க. அதற்கு அவர், இதை உருவாய்க்கியது ஒரு சிறந்த கலைஞர் னு" சொல்லிட்டு "நாம சீக்கரம் அரண்மனைக்கு போயாகனும்" சொல்றார். கரோல் சரியென்று வண்டில ஏறுறாங்க. வண்டிய சுத்தி சுத்தி பாத்துட்டு வண்டிக்காரர் கிட்ட மீண்டும் கேக்குறாங்க. "இந்த வண்டி ஏன் இப்டி வடிவமைக்கப்பட்டிருக்கு" என்று. வண்டிக்காரரோ , "நீங்க போற இடத்துல தூங்கறதுக்கு வசதி இருக்காது. தூக்கம் வந்தால் வண்டிலையே தூங்கலாம் ஸ்லீப்பின்ட்ரெல்லா" என சொல்கிறார் சிரிப்புடன். கரோல் அதைக்கேட்டு நல்ல சிரித்து கொண்டு ,"ஆமா உண்மை தான்" னு சொல்லிட்டு வெளிய வேடிக்கை பார்த்திட்டு வராங்க. தூங்கும் இளவரசி அரண்மைக்கு வந்து சேருறாங்க. கீழ இறங்குறாங்க. வண்டிக்காரர், "நீங்க இந்த அரண்மனைல உங்க பொன்னான நேரத்தை கழியுங்க. இந்த அரண்மனை உட்புறம் அழகா இருக்கும் கேள்விபட்ருக்க, மிகப்பெரிய தூண்கள், அழகான ஓவியங்கள் அப்ரோ இங்க இருக்க இளவரசர் கூட மிகவும் தன்மையானவர் னு சொல்லுவாங்க, அதனால உங்க இரவு இங்க அழகா அமையட்டும். உரித்த நேரத்துல வந்துருங்க நா உங்களுக்காக காத்துட்டு இருப்பேன்" னு சொல்லிட்டு ஓய்வு எடுக்க கெளம்புறார்.
ஸ்லீப்பின்ட்ரல்லக்கு தான் கண்ட கனவு இங்க பலிக்க போகுதுனு சந்தோசபட்றாங்க. சரி அஞ்சு நிமிஷம் தூங்கிட்டு போலாம்னு தன்னோட வண்டில தூங்குறாங்க. அவங்க நெனச்சது அஞ்சு நிமிசத்துல எந்திருக்கணும்னு தா. ஆனா அது நடக்கல. அதே நேரத்துல அரண்மனைல விருந்து தொடங்கி அங்க வந்த கரோல் நண்பர்கள், மற்ற பெண்கள் எல்லாரும் இளவரசரோட ஆடி பாடி அந்த இரவ சந்தோசமா கழிச்சாங்க. ஆனால் கரோலா அந்த இடத்துக்கு உண்மையா போகாம கனவுல இளவசரோட ஆடிட்டு இருந்தாங்க. விருந்து முடிஞ்சு காரோலோட நண்பர்கள் வெளிய வந்து தூங்கிக்கொண்டிருந்த கரோலை பாத்து சிரிச்சாங்க. ஸ்லீப்பின்ட்ரெல்லா ஒருவழியா தூக்கத்துல இருந்து முழிச்சுட்டியா?. சரி வா கிளம்பலாம். விருந்துல இளவசர் அவருக்கு புடிச்ச பொண்ண தேர்தெடுத்துட்டாங்க. அவங்க பாக்க ரொம்ப அழகா இருந்தாங்க. தூங்கும் ராணி கனவுல இளவரசரோட கல்யாணம் பண்ணிகிட்டாங்க. ஆனா நிகழ்காலத்துல இளவரசர் அவருக்கு புடிச்ச பெண்ணை தேர்தெடுத்துட்டார். மனசுடைஞ்சு போன ஸ்லீப்பின்ட்ரல்ல அங்கேயே நின்னுட்டு எல்லாரும் போனதுக்கு அப்ரோ போலாம்னு முடிவெடுத்தாங்க. சோகமா அங்க இருந்து கெளம்புனாங்க. மனசுல ஒரு யோசனையோட போறாங்க. எப்படி இளவரசரை பக்கமா பாத்துட்டோம்னு அப்பா அம்மா கிட்ட சொல்றது. இப்டி தூங்கி தப்பு பண்ணிட்டோமே னு. அப்போ அவங்களுக்கு ஒரு இசை கேக்குது. அது அவங்களுக்கு மட்டும் இலை எல்லாருக்கும் கேக்குது. அது கேட்டு எல்லாருக்கும் தூக்கம் வந்துருச்சு.
கரோல்க்கு ஒரே ஆச்சரியம் நமக்கு மட்டும் தூக்கம் வரலையேனு. வண்டியோட கதவ திறந்து பாக்கறாங்க. அவங்களுக்கு ஒரு குரல் கேக்குது. "எல்லாரும் தூங்கிட்டாங்க. மொத்த நகைகளையும் எடுத்துக்கலாம் வா" னு. ஆமா அது திருடர்கள்.
வசிய இசையை எழுப்பி, எல்லாரையும் மயக்கமடைய செஞ்சுட்டு, திருட வந்துருக்காங்க. "நா இவங்கள தடுத்து நிறுத்தி ஆகணும் "னு நெனைக்கறாங்க. அவங்க ரெண்டு பேர தன்னால சமாளிக்க முடியாதுனு வேற திட்டம் யோசிக்கிறாங்க. வண்டியோட ஜன்னல் மேல இருந்த துணிகளை போட்டுக்கிட்டு பேய் மாறி சித்தரிக்கறாங்க. பயமான ஓசை எழுப்பறாங்க. ஏதோ விசித்தரான சத்தம் கேக்குதுனு பயத்துல திருடர்கள் பாக்குறாங்க. கரோல் அவங்க முன்னாடி நின்னு, "இந்த காட்டோட பேய் நான். என்னோட இடத்துல வந்து கொள்ளையடிக்க வந்திருகிக்கிங்க, உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்" னு மிரட்டல் தோணில பேசுறாங்க. பயந்துபோன திருடர்கள், " நாங்க தெரியாம வந்துட்டோம்.
எங்களை விட்டுடு நாங்க இந்த பக்கம் வரமாட்டோம்" னு ஓடிப்போறாங்க. அந்த சத்தத்துல மயக்கத்துல இருந்த எல்லாரும் முழிச்சாங்க. திருடர்களை பாத்துட்டு வண்டிக்காரர் அவங்கள புடிச்சுட்டு வந்தாங்க. ஸ்லீப்பின்ட்ரெல்லா நடந்தது எல்லாம் சொல்ராங்க. சுத்தி இருந்த எல்லாருக்கும் ஸ்லீப்பின்ட்ரெல்லாவ பாராட்டுனாங்க. "ரொம்ப நன்றி கரோல், உன்னால தா எங்க பொருள்கள் காப்பாத்தப்பட்டிருக்கு" னு சொல்ராங்க. "உன்னோட தைரியத்துக்கு உனக்கு பெரிய பரிசு குடுக்கலாம் கரோல்"னு.வண்டிக்காரர் சொல்றார்.
"பரிசு எனக்கு இல்ல என்னோட தூக்கத்துக்கு தா. நா வண்டில நல்ல தூங்குனாதானால தா என்னால முழிக்க முடிஞ்சுது. உங்கள காப்பாத்த முடிஞ்சுடுச்சு. ஆனாலும் பரிசு யாருக்கு கொடுக்கணும்னு நா சொல்ற" னு கரோல் சொல்ராங்க. மறுநாள் காலைல எல்லாருக்கும் விசயம் பரவுது. நகரத்து அரசர் கரோலை நேர்ல பார்த்து பாராட்டி பரிசு தாரார். கரோல் சொல்ராங்க, "அரசரே, தைரியம் மட்டும் இல்ல. நல்ல அறிவும் துணையாக இருந்ததால்தா என்னால எல்லாரோட பொருள்கள காப்பாத்த முடிஞ்சது. அதுக்கு பெரிய காரணம் என்னோட வண்டிய உருவாக்கின கலைஞர்" தானு சொல்ராங்க. கலைஞர் அரசவைக்கு வரவழைக்கபட்டர். கரோல் முதல்முறையாக அவரை பாக்கறாங்க. அரசர் இருவருக்கும் பரிசு தரங்க. ஆனா கரோலோட உண்மையான பரிசு அவங்க கனவுல பார்த்த இளவரசரை நேர்ல பாத்தது.
ஆமாம், அந்த வண்டியை வடிவமைத்த கலைஞர் தான் கரோலோட கனவு இளவரசர் . இருவரும் தங்களோட அன்பை பரிமாறி கொண்டாங்க. இனி கரோல் ஸ்லீப்பின்ட்ரெல்லாவ இருக்க போறது இல்ல. அவங்க கனவுல இருந்த மாறி நிகழ்காலத்துலயும் தன்னோட இளவரசர் கூட மகிழ்ச்சியா இருக்க போறாங்க.
குட்டிஸ் கதை நல்ல இருந்ததா. நீங்களும் உங்க கனவை லட்சியமா கொண்டு முயற்சி செய்ங்க. நேர்மையோடும் அன்போடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications