குழந்தை நீதி கதைகள்: அப்படியொரு ஆனந்தம் ஷைலேஷ் முகத்தில்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ்.. எப்படி இருக்கீங்க? யாரோட ஊரில் எல்லாம் மழை வெளுத்து வாங்குகிறது. புயலின் தாக்கம் இருக்கிறதா.. சரி இப்போ நம்ம கதைக்குள்ள போகலாமா..
ஷைலேஷ் மிகவும் நல்ல பையன். அவனது அம்மாவும் மிகவும் நல்லவர். ஷைலேஷிடம் நல்ல விளையாட்டு பொம்மைகள் இருந்தன. அதனுடன் அவனுக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிளும் இருந்தது.

ஆனால் முக்கியமாக பக்கத்து வீட்டில் இருக்கும் ராஜாவிற்கு கொடுக்கமாட்டான். ராஜாவின் வீட்டில் கொஞ்சம் ஏழ்மை தான். அவர்களால் பொம்மைகளுக்காக செலவு செய்ய முடியாது. ராஜா எப்போதும், ஷைலேஷ் விளையாடும் போது அதை உற்று கவனித்து பார்ப்பான். அவனை பார்க்கும் ஷைலேஷ் உடனடியாக மறைத்து வைப்பான்.
இதை கவனித்த ஷைலேஷ் அம்மா, அவனையும் விளையாட சேர்த்து கொள்ளலாம் இல்லையா? ஏன் அவனை ஏற்க மறுக்கிறாய் என்று கேட்க, அவன் ஒருவேளை என் பொம்மைகள் உடைந்துவிட்டால் நான் என்ன செய்வேன் என பதில் அளித்தான்.
ஒருநாள் ரோஹனின் அப்பா வெளிநாட்டில் இருந்து சில பொம்மைகளை வாங்கி வந்தார். ரோஹன், ஷைலேஷை வீட்டிற்கு விளையாட அழைத்தான். ஷைலேஷும் சந்தோசமாக ரோஹன் வீட்டிற்கு செல்ல, அங்கு ஒரு பெரிய பொம்மை ரயில் இருந்தது. அதன் ரயில் பாதைகளை இருவரும் ஒன்றாக சேர்ந்து அதை வரிசை படுத்தினார்கள். மேலும் அதில் சில சிக்னல்கள், ஸ்டேஷன் மாஸ்டர், பிளாட்பார்ம் என உண்மையான ரயில் தடங்களுக்கு தேவையான பொம்மைகள் இருந்தன.
அதை ஒவ்வொன்றாக எடுத்து வைக்க எடுத்து வைக்க ரோஹணின் அப்பாவிற்கும் அதில் ஆர்வம் அதிகமாக 3 பேரும் ஒன்றாக விளையாடினார்கள். அது ஷைலேஷிற்கு நேரம் போனதே தெரியவில்லை. மீண்டும் வீட்டிற்கு வந்து ஷோபாவில் ஏறி குதித்து கொண்டிருந்தான்.
இவ்வளவு குஷியாக இருக்க என்ன காரணம் என அம்மா கேட்க, ஷைலேஷ் ரோஹன் கொடுத்த ரயில் பொம்மைகளை பற்றி பேசி கொண்டிருந்தான். ஜாலியாக இருந்தது அம்மா, அடுத்த முறை எப்போது கூப்பிடுவான் என ஆசையாக இருக்கிறது என்று சொன்னான் ஷைலேஷ்.
ரோஹன் கொடுத்ததனால் நீயும் மகிழ்ச்சியாக இருந்தாய், அவனும் உன்னுடன் நன்றாக விளையாடினான் அல்லவா என்றார் அம்மா. ஆமாம் ஆமாம் என்றான் ஷைலேஷ். அப்போ நீ ராஜாவிற்கு கொடுத்து விளையாடினால் நீங்கள் இருவருமே சந்தோசமாக இருக்கலாம் தானே என்றார் அம்மா. ஆனால் அம்மா.. என்றான் ஷைலேஷ். ஒருவேளை ரோஹன் உன்னை அழைக்கவில்லை என்றல் உனக்கு இந்த மகிழ்ச்சி கிடைத்திருக்குமா என்றார் அம்மா. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் ஷைலேஷ்.
சரி.. உன் இஷ்டம் என்று சொல்லி அம்மா நகர்ந்தார். பொழுது சாயும் நேரத்தில் ஷைலேஷ் வீடு வாசலில் கால் பந்தை வைத்து விளையாடி கொண்டிருந்தான். அதை தூரமாக இருந்து ராஜா உற்று பார்த்தான். ஷைலேஷ் ராஜாவை பார்த்ததும் விளையாட வரியா என்று கேட்டான். ராஜாவும் துள்ளி குதித்து விளையாடினான். ஒருவழியாக இருவரும் சந்தோசமாக மணிக்கணக்கு தெரியாமல் விளையாடி கொண்டிருந்தார்கள்.

நேரம் இருட்ட ஆரம்பித்ததும் தான் இருவரும் பிரிந்து சென்றார்கள். ஷைலேஷ் அம்மாவிடம் வந்து அம்மா நீங்கள் சொன்னது சரிதான். நான் ராஜாவுடன் சேர்ந்து விளையாடும்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நாளை நாங்கள் இருவரும் எனது கிரிக்கெட் கிட் வைத்து விளையாட போகிறோம் என்று குஷியாக சொன்னான். அம்மாவுக்கு மகனின் இந்த குணத்தை மாற்றியது மகிழ்ச்சியை கொடுத்தது.
ஆகையால் குழந்தைகளே உங்கள் அருகில் இருப்பவர்களுடன் பகிர்ந்து கொடுத்தால் அளவில்லாத ஆனந்தம் உங்களுக்கும் கிடைக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications