குழந்தை நீதி கதைகள்: மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா? அப்போ இந்த கதையை படிங்க..
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், எப்படி இருக்கீங்க. விடுமுறையில் எல்லாரும் என்ன பண்றீங்க. சந்தோசமா இருக்கீங்களா, அப்படி இல்லைன்னா இந்த கதையை படிங்க. எப்படி ஹாப்பியா இருக்கலாம்னு தெரிஞ்சிப்பீங்க.
டேவிட் ஒரு செல்வந்தன், அவனுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ராபினும் செல்வந்தன் தான். இருவரும் ஒரே சமயத்தில் வியாபாரம் செய்து ஒன்றாகவே வீடு கட்டி பெரிய செல்வந்தர்களாக மாறினார்கள். ஆனால் எனோ டேவிட் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து பொங்கினான் ராபின். நாமும் அவனை போலத்தான் பொருள் ஈட்டி வருகிறோம் ஆனால் அவன் மட்டும் எப்படி மக்களுடன் ஒன்றாக பழக முடிகிறது என்று யோசித்து வெம்பினான்.

ராபின் அந்த ஊரில் இருந்த ஒரு மந்திரவாதியை சென்று பார்த்து அவனுடைய சந்தோசம் பறிபோக வேண்டும் என்று சொல்ல அவனும் நான் பார்த்து கொள்கிறேன் என்றான். டேவிட் வீழ்ந்து விடுவான் பின்பு எப்படி மகிழ்ச்சியாக இருப்பான் என்று பார்க்கலாம் என எண்ணி கொண்டே நகர்ந்தான். மந்திரவாதி சில மந்திரங்களை போட்டு அவனது வியாபாரத்தை முடக்கினான்.
திடீரென வியாபாரம் படுதோல்வி அடைய, டேவிட் அவன் வைத்திருந்த பெரிய வீட்டை விற்று அதனருகில் ஒரு குடிசை வீடு கட்டினான். ஆனாலும் பாட்டு பாடி கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த ராபினுக்கு அது எப்படி இவனால் முடிகிறது. வீடும் போய் விட்டது, தொழிலும் முடங்கிவிட்டது, இந்த நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறானே என மறுபடியும் சூழ்ச்சி செய்ய முடிவு செய்தான். மீண்டும் மந்திரவாதியை போய் பார்த்தான்.
அவனும் சரி நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்ல, ராபின் மகிழ்ச்சியாக அங்கிருந்து கிளம்பினான். டேவிட் குடும்பத்துடன் அருகில் இருந்த ஒரு நகரத்திற்கு கப்பலில் செல்ல பெருத்த புயல் ஏற்பட்டது. கப்பல் கடலில் கவிழ அவனது மொத்த குடும்பமும் கடலில் காணாமல் போனார்கள். டேவிட் மட்டும் தனியாக அவனது ஊருக்கு வந்தான். இந்த சூழலில் இவன் என்ன செய்ய போகிறான் என்று ஆர்வமாக பார்த்தான் ராபின். கொஞ்ச காலம் சோகமாக இருந்த டேவிட் மீண்டும் அவன் செய்து கொண்டிருந்த சின்ன வேலையை தொடங்கி செய்ய ஆரம்பித்தான். அவன் மீண்டும் பாட்டு பாடி மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த ராபினுக்கு பொறுக்க முடியாத கோபம் வந்தது.
அவனை விட எல்லாமே என்னிடம் இருக்கு ஆனால் என்னால் சந்தோசமாக வாழ முடியவில்லை. எப்போ எதை எவன் திருடி செல்வான் என்ற பயம் ஒரு பக்கம், நன்றாக சென்று கொண்டிருக்கும் வியாபாரம் மூழ்கி விடுமோ என்ற பயம், மேலும் எனது குடும்பம் ஆயுள் வரை நன்றாக இருக்க வேண்டும் என்ற இந்த பயங்கள் அவனை வாட்டும் நிலையில் அனைத்தையும் இழந்த இவன் மகிழ்ச்சியாக இருக்கிறானே என்ற வன்மம் வேறு ராபின் தூக்கத்தை கெடுத்தது.
ஒருவேளை பணம் இல்லாமல் இருப்பதால் நிம்மதியாக இருக்கிறானோ? என நினைத்து கொண்டு அவனுக்கு கொஞ்சம் பொருள் கொடுத்து பைத்தியம் ஆக்கிவிடலாம் என்று எண்ணினான் ராபின். அது போல டேவிட்டிடம் சென்று , நண்பா இந்த பொருளை வைத்து சந்தோசமாக வாழு, நீ இப்படி பாடி கொண்டிருப்பதை கேட்க நானும் மகிழ்ச்சியடைகிறேன் என்று நமட்டுதமனாக சிரித்தான்.
இதை யோசிக்காத டேவிட், அவன் கொடுத்த பணத்தை மீண்டும் வியாபாரத்தில் முதலீடு செய்தான். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினான். அவனும் அதே போல மகிழ்ச்சியாக இருப்பதை கண்ட ராபினால் பொறுத்து கொள்ள முடியவில்லை. வியாபாரத்தில் கோட்டை விட்டான். ஒவ்வொன்றாக இழக்க ஆரம்பித்தான்.
டேவிட் பழைய நிலைக்கு திரும்பினான். ஆனால் ராபின் அனைத்தையும் இழந்து ஒரு பித்து பிடித்தவன் போல அலைய ஆரம்பித்தான். அவனால் மற்றவர்கள் மகிழ்ச்சியை பார்க்க முடியாமல் நடந்து திரிந்தான். ராபின் செய்த வினை அவனையே பாதித்தது.
ஆகையால் குழந்தைகளே உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள். உங்களைவிட சிறந்தவர் என்று யாரும் இல்லை. மகிழ்ச்சி என்பது நமது கைகளில் தான் உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications