குழந்தை நீதி கதைகள்: கொக்கரக்கோ சேவலே! கொண்டையாட்டும் சேவலே! கூவியே மாட்டிக்கிட்டானே
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், எப்படி இருக்கீங்க, ஸ்கூல் போறதுக்கு காலைல உங்கள தினமும் யார் எழுப்புவாங்க, அம்மா அப்படித்தான. அவங்கள யார் எழுப்புவாங்க கடிகாரத்தோட அலாரம் இல்லையா. நம்ம கிராமங்களில் இவங்கள எழுப்புறது யாருன்னு தெரியுமா சேவல் தான். காலைல விடியும் வேளையில் கொக்கரக்கோ அப்படினு கூவியே எல்லாரையும் எழுப்பும். அந்த குரல் கிராமத்துல வாழற பலருக்கும் அலாரம் தான். எழுந்ததும் கேட்கும் சங்கீதம் கூட அதுதான்.
ஆமா இன்னைக்கு நாம ஒரு சேவலோட கதையைத்தான் படிக்க போறோம். சரி இந்த கதைல வர சேவல் என்ன பண்ணிச்சுனு படிக்கலாமா வாங்க..

ஒரு அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். இப்போ இருக்கிற எந்த வித வசதிகளும் இல்லாத மலை காடுகளுக்கு அடியில் வாழும் மக்கள் நிரம்பிய சிறிய கிராமம். அங்க நம்ம கிட்டு இருந்தது. கிட்டுக்கு அழகான இளஞ்சிவப்பு நிறத்தில் இறக்கைகள், நல்ல வளர்ந்த ரத்த சிவப்பில் கிரீடம் போன்ற கொண்டை. பார்ப்பதற்கு அத்தனை அழகு நம்ம கிட்டு என்கிற சேவல். அதை விட அவனது குரல் மிகவும் வசிகரமானது. அவன் கூவும் போது அவனுக்கே ஒரு மமதை ஏற்பட ஆரம்பித்தது.
கிட்டு அதன் குரல் மீது ஏற்பட்ட கர்வத்தால், அதனுடன் இருக்கும் மற்ற மிருகங்களை மதிப்பதில்லை. மேலும் மற்ற கோழிகளிடம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வந்தது. மிருங்களுக்கு அதன் மேல் வெறுப்பு இருந்தது ஆனால் அதன் குரலுக்காக எதுவும் சொல்லாமல் இருந்தன. சில மிருகங்கள் இவன் கண்டிப்பாக எங்கயாவது படுவான் அப்போது தெரியும் என்றும் இருந்தன. கிட்டு செய்வது தவறு என யாரும் முன் வந்து கூறவில்லை.
இப்படியே நாட்கள் சென்றன. கிட்டு காலையில் கூவுவதற்கே அலுத்து கொண்டான். இந்த மனிதர்களுக்காக கூவுவதால் தன்னுடைய குரல் தான் வீணாகி போகிறது. இருந்தாலும் நான் கூவவில்லை என்றால் இவர்களுக்கு எப்படி விடிந்தது என்று தெரியும் என்று அலுத்து கொண்டே கொக்கரக்கோ என கூவியது.
வழக்கம் போல் மற்ற மிருங்கங்களை மிரட்டி கொண்டே இருந்தது கிட்டு. மலையில் சரியாக இறை கிடைக்காத ஒரு பெரிய கழுகு ஒன்று கிராமத்தில் ஏதாவது கிடைக்கும் என பறந்தது. கழுகு பார்வை என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு கழுகு கண்கள் கூர்மையாக இருக்கும். ஆனால் அன்று என்னவோ கழுகுக்கு சரியாக ஏதும் கண்களில் படவில்லை. சிறியதாக எதாவது விலங்குகள் கிடைத்தால் கூட பரவாயில்லை என்ற எண்ணத்தில் பறந்தது கழுகு.
சிறிது நேரம் சுற்றி திருந்தும் கழுகு கண்களில் சிக்கவில்லை. ஆனால் அதன் காதுகளில் ஒரு குரல் கேட்டது. எதோ ஒன்று கூவுவது போல, சத்தம் வந்த திசை நோக்கி பறந்தது கழுகு. அது வேற யாரும் இல்ல நம்ம கிட்டு தான். மற்ற மிருகங்களை தன் குரலால் மிரட்டவே கொக்கரக்கோ என கூவி கொண்டிருந்தது. அது இருந்த மமதையில் கழுகு பறந்து வரும் சத்தத்தை கவனிக்கவில்லை. மற்ற மிருங்கள் பயந்து ஒளிவதை கண்ட கிட்டுவிற்கு இன்னும் குஷி ஆனது. இன்னும் சத்தமாக கூவியது. மிருகங்கள் கழுகை பார்த்து ஒளிந்தது கிட்டுக்கு தெரியவில்லை.
அவ்வளவுதான் ஒரே தூக்கு கழுகு கிட்டுவை தூக்கி கொண்டு பறந்தது. தனக்கு சரியான வேட்டை என கழுகு நினைத்தது. குரல் மேல் இருக்கும் கர்வத்தால் மதி மறந்து நடந்து கொண்டோமே என வருந்தியது கிட்டு.
ஆகையால் குழந்தைகளே உங்களுக்கு ஒரு திறமை இருக்கிறது என்றால் அதை வைத்து மற்றவர்களை எப்போதுமே அதிகாரம் செய்ய கூடாது. அதற்கு பதிலாக அந்த திறமையை மேலும் மெருகேற்றி சிறப்படையுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications