குழந்தை நீதி கதைகள்: திடீரென மனம் மாறிய வருண்.. காரணம் இது தான்!
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க. யாருக்கெல்லாம் ஞாயிற்று கிழமை வந்தால் நண்பர்களுடன் சென்று வெளியில் விளையாட பிடிக்கும். உங்கள் நண்பர்களில் யாராவது வர முடியாமல் போயிருந்தால் அவங்களுக்கு கண்டிப்பா இந்த கதையை சொல்லுங்க.
வருண்.. வருண் சனிக்கிழமை காலைலயே டிவி பார்க்க ஆரம்பிச்சிட்டியா? ஒழுங்கா அதை ஆஃப் பண்ணு. வீட்ல எவ்ளோ வேலைகள் இருக்கு. எந்திரிச்சி போய் அதையெல்லாம் செய்யுற வழிய பாரு. எதையும் சட்டை செய்யாமல் டிவியில் கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தான் வருண்.

அம்மா, சத்தமாக கூப்பிட்டும் போறேன்மா என சொல்லி மீண்டும் டிவியில் கவனத்தை வைத்தான். அம்மா வேகமாக வந்து கண்ணை உருட்டி முறைத்ததும் ஆஃப் செய்துவிட்டு அறைக்கு சென்றான். பின்னாடியே அம்மா வந்து, உன் அறையை பாரு எப்படி இருக்கு, முதலில் எல்லா பொருட்களையும் அடுக்கி சரியாக வை என்றார்.
அவன் மேசையில் கலைந்து கிடைக்கும் புத்தகங்கள், அடுக்கப்படாத துணி, தரையில் கொட்டி கிடைக்கும் விளையாட்டு பொருட்கள், அதுமட்டுமில்லாமல் சாப்பிட்டு போட்ட ஸ்னாக்ஸ் காலி பாக்கெட்டுகள் மெத்தைக்கு அடியில் என அலங்கோலமாய் இருந்ததை பார்த்து அம்மா கேள்வி கேக்க, அம்மா.. இது எப்படி சுத்தம் செய்யுறது எனக்கு கொஞ்சம் உதவுறீங்களா என்றான் வருண்.
அவனை முறைத்து பார்த்த வருண் அம்மா, ஆமா.. உனக்கு இதே வேலையா போச்சு, எப்போவுமே நான் உதவி செய்றதுனாலதான் நீ அதை சுத்தம் செய்யமால் வைத்திருக்கிறாய். இதுதான் உன் ஸ்கூல்ல சொல்லித்தரங்களா? இல்லை இந்த சுத்தம் போதும்னு சொன்னார்களா? என வசை பாட ஆரம்பித்தார்.
எதையும் பொருட்படுத்தாத வரும் அம்மா ப்ளீஸ் மா.. என்றான். முடியவே முடியாது, சுத்தம் செய்தால் நாளைக்கு கிரிக்கெட் விளையாட அனுப்புவேன். இல்லையென்றால் அதை மறந்துவிடு என்று கடினமாக சொல்ல, இதை இதில் இருந்து ஆரம்பிப்பது என தெரியவில்லை என புலம்பினான். ஓ.. அப்படியா! உன் அறை தானே, நீதானே அழுக்காக வைத்திருக்கிறாய் நீயே யோசித்து செய் என சொல்லி அம்மா அங்கிருந்து கிளம்பினார்.
வருண் முடிந்தவரை ஒவ்வொரு பொருளாக மாற்றி வைத்து பார்த்தான், அது எதுவுமே வேலைக்கு ஆகவில்லை, சோர்வானதுதான் மிச்சம். அப்போது கீழே காலிங் பெல் அடிக்க, பக்கத்து வீட்டு மீனா ஆன்டியின் மகளின் குரல் கேட்டது. வருண் வேகமாக ஓடி சென்று பார்க்க, அவள் கைகள் நிறைய பூங்கொத்துடன் வந்திருந்தாள்.
வருணின் அம்மா, என்னம்மா என்று கேட்க, அப்பாவின் ஆபிஸில் பூக்கள் நிறைய கொடுத்தார்களாம், அம்மா அதை உங்களுக்கும் கொடுக்க சொன்னார்கள் என்று சொல்ல வருண் அந்த பூக்களை ஆசையாக பார்த்தான். சரி டா அம்மாக்கு நன்றி சொன்னேன் சொல்லிடு என்று வருணின் அம்மா அதை வாங்கி கொண்டு டைனிங் டேபிள் மேலே வைத்தார்.
இரவு சாப்பிடும் நேரம் வர, வருண், அம்மா மற்றும் அப்பா என மூவரும் சாப்பிட, நீ உன் அறைகளை சுத்தம் செய்துவிட்டாயா என கேட்க, இல்லை என முகத்தை தொங்க போட்டான் வருண். சரி அப்போ நாளை விளையாட செல்வதை மறந்துவிடு என சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்றார்.
வருண் சோகமாக அவனது அறைக்கு சென்றான். காலை விடியும் போது அவனது அறையின் மேசையில் அதே பூங்கொத்து இருந்தது. அதை பார்த்ததும் முகம் முழுக்க புன்னகைக்க, அடுத்த நொடியே அவன் ஏரியின் அலங்கோலத்தை பார்த்து கொஞ்சம் கடுப்பும் ஆனான்.
அப்போது அந்த பூக்கள், ச்ச இந்த அறையிலையா நாம் இருக்கனும் என பேச உடனடியாக அவனது மேசையில் இருக்கும் புத்தகங்களை அடுக்கினான் வருண். அங்க பாரு அந்த கபோர்ட் எப்படி இருக்கு என பூக்கள் பேச, அடுத்த நொடியே அதை படபடவென அடுக்கினான். தரையில் கிடந்த பொம்மைகளை எடுத்து அழகாக வைத்தான். இப்போது அறையில் நிறையவே இடம் இருப்பதாக உணர்ந்தான்.
அந்த சமயம் இன்னொரு பூ சொன்னது, இவனது கட்டில் அடியில் பாரேன் சுத்தமாகவே இல்லை, ஆனால் இவன் முகத்தை பார் ஏதோ சாதிச்ச மாறி இருக்கிறான் என கேலி செய்ய உடனடியாக கட்டில் அடியில் இருந்த குப்பைகளை சுத்தம் செய்தான்.
அவனை எழுப்புவதற்காக வந்த அம்மா, வருண் அறையை பார்த்து ஷாக் ஆக, ஏய்.. இது எப்போடா பண்ண என கேட்டார். அதுவா இந்த பூக்களை பார்க்கும் போது ஒரு மாதிரி ஹாப்பியாக இருந்தது. அப்புறம் பூக்கள் எல்லாம் என்னை கேலி செய்ய ஆரம்பிச்சிடுச்சு அம்மா, அதான் அது சொல்ல சொல்ல எல்லாவற்றையும் சரியாக வைத்துவிட்டேன் என்றான். அடடா சூப்பர்டா என அம்மா வருணை கொஞ்ச அவனுக்கு மனது குதூகலமாய் துள்ளியது.
பூக்களிடம் ஏதோ மாஜிக் இருப்பதாக உணர்ந்தான் வருண். ஜாலியாக விளையாட சென்றான்.
ஆக சுட்டிஸ் இனி உங்க நண்பர்கள், விளையாட வரவில்லை என்றல் நீங்கள் அந்த மேஜிக்கல் பூக்களை வாங்கி கொடுத்து, அம்மாவுக்கு எதாவது வகையில் உதவியாக இருக்க சொல்லுங்கள். அதற்கு பிறகு கண்டிப்பாக உங்கள் நண்பர்களும் விளையாட வரலாம்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications