என்ன பெரிய டிப்ரஷன்.. மூக்கு அடைச்சுக்கிட்டு ராத்திரி பூரா தூங்காம வாயில மூச்சு விட்டுருக்கியா?
மழைக்காலத்தில் சளியால் மக்கள் படும் அவதிகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: குளிர், மழை என கிளைமேட் ஒருபுறம் படுத்துகிறது என்றால், அதன்பலனாக சளி, காய்ச்சல், இருமல் என மற்றொருபுறம் உடல்நிலையும் இதனால் பாதிக்கப்படுகிறது என அடைத்துக் கொண்ட மூக்கை வைத்து மீம்ஸ் போட்டு புலம்பிக் கொண்டிருக்கின்றனர் மக்கள்.
'என்ன பெரிய டிப்ரஷன்.. மழைக் காலத்துல மூக்கு அடைச்சுக்கிட்டு, ராத்திரி பூரா தூங்காம வாயில் மூச்சு விட்ருக்கியா?' என மூக்கு அடைத்துக் கொள்ளும் வேதனையைக்கூட, படித்தால் சிரிப்பு வரும்படி ஜாலியான மீம்ஸ்களாக சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
குளிர்காலத்தில் மழையில்தான் நனைய வேண்டும் என்றில்லை.. வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், குளிர்காற்று தேடி வந்து நமக்கு தந்து செல்லும் பரிசுகளில் ஒன்று இந்த ஜலதோசம். ஒன்று மூக்கு சளியால் அடைத்துக் கொண்டு மூச்சுவிட சிரமமாக இருக்கும்... இல்லையென்றால் கண்ணிலும், மூக்கிலும் குற்றால அருவியாக நீர் கொட்டும். அதனைத் துடைப்பதற்கு இரண்டு கைகள் பத்தாது.
இதை வைத்து, 'கண்ணீரைத் துடைக்கக்கூட ஆட்கள் வருவார்கள்.. ஆனால் மூக்கைத் துடைக்க ஒருவரும் வரமாட்டார்கள்.. எனவே சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.. ஏனென்றால் இது மழைக்காலம்..' என நகைச்சுவையாக மீம்ஸ் போட்டு அறிவுரை கூறி வருகிறார்கள் நம் பாசக்கார மீமர்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான குளிர்கால மீம்ஸ்கள் உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications