நீ மட்டும் இல்லைனா.. என்னாகும் வாழ்க்கை!
சென்னை: மழை பெய்யும் பொழுது டீ குடிக்கிறவங்க ஒரு ரகம்னா, கொளுத்துற வெயில்ல கூட டீ வேணும் என்று சொல்லிக்கொண்டு குடிக்கிறவங்க இன்னொரு ரகம். ஒரே டீ ஆனாலும், ஒவ்வொருத்தருக்கும் அது ஒரு தனி அனுபவம். சிலருக்கு அது ஒரு பழக்கம்தான், சிலருக்கு அது தான் வாழ்க்கையே..
பல இளைஞர்களுக்கு, குறிப்பாக வேலை தேடும் பலருக்கும், டீ என்பது ஒரு சாப்பாடாகவே ஆகிவிடுகிறது. காலையில் எதுவும் சாப்பிடாமல் ஒரு கடையில நின்று டீ குடிக்கும்போது அதுவே ஒரு எனர்ஜி கொடுக்கிறது. சிலருக்கு, ஒரு நாள் முழுக்க பயங்கரமான வேலை பளு இருக்கட்டும், மாலையில் ஒரு டீ இல்லையென்றால் அந்த நாளே முடிந்த மாதிரி இருக்கும்.

சின்ன பிரச்சனை வந்தாலும், "ஒரு டீ குடிக்கலாமா?" என்ற ஒரு வாக்கியம்தான் ஆரம்பம். அந்த டீயில் மூழ்கி, சில நிமிடங்களில் மனம் ரிலாக்ஸ் ஆகும். மனதுக்குள் நடக்கும் பல போராட்டங்களுக்கு ஒரு சூடான டீ ஒரு சின்ன மருந்தாக இருப்பது உண்மைதான்.
பல இளைஞர்களின் சாப்பாடாகவே இந்த டீ பல வேளைகளில் இருக்கிறது. சின்ன பிரச்சனை வந்தாலும் டீ குடிச்சா சரி ஆகிடும்ன்னு நினைக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க.
அது மட்டுமில்ல போர் அடிக்குது என்பதற்காக கூட டீ குடிப்பவர்கள் இன்னும் ஒரு படி மேல். பலரால் இந்த டீ இல்லாமல் ஒரு நாளை கடத்த முடியாது. ஏன், அவர்களால் ஒரு பொழுதை கூட நகர்த்துவது முடியாத காரியம். இது பலருக்கும் பொருந்துவதாலே சமூக வலைத்தளங்களில் டீ பற்றிய மீம்ஸ்கள் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. அதில் சில இதோ..





















Click it and Unblock the Notifications