சின்ன புரட்சி தலைவி தாக்கப்பட்டாரா ஒரு கண்ணீர் இல்லையா? கடையடைப்பு இல்லையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை போயஸ் கார்டனில் இன்று பெரும் களேபரம் நடந்ததை தொடர்ந்து நெட்டிசன்ஸ் தீபாவை ஒரு கை பார்த்து வருகின்றனர். அவரை கலாய்த்து ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

இன்று காலை போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்ற தீபா தனது சகோதரர் தீபக் தன்னை திட்டமிட்டு வரவழைத்து தாக்கியதாக குற்றம்சாட்டினார். தன்னை கொல்ல முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதா இருந்தவரை அமைதின் சொரூபமாக இருந்த போயஸ்கார்டன் இன்று பெரும் களேபரமானது. இந்நிலையில் இதனை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

கோர்ட் வக்கீல்,நீதிபதி எதற்கு?

எனக்கு நடத்த துயரத்தை கண்டிப்பாக பிரதமரிடம் கூறி முறையிடுவேன். #தீபா ஆ ஊன்னா மோடிகிட்டதான் போவிங்களா?அப்ப கோர்ட் வக்கீல்,நீதிபதி எதற்கு? என்கிறார் இந்த வலைஞர்

கடையடைப்பு இல்லையா?

சின்ன புரட்சி தலைவி தாக்கப்பட்டாரா ஒரு கண்ணீர் இல்லையா, கடையடைப்பு இல்லையா?? என்கிறார் இந்த நெட்டிசன்...

சன்டேனு கூட பாக்காம..

தினகரன் ஆட்க்கள் என்னை அடித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள் #பேபிமா #தீபா சன்டேனு கூட பாக்காம டிஸ்டர்ப் பண்றியே பேபிமா !!! என்கிறார் இந்த வலைஞர்

மாதவன், எப்படி உங்க கூட?!

தீபக் உங்களை உள்ளே விடலை என்பது கிடக்கட்டும்...ஆனா நீங்க வெளியே துரத்திய உங்க கணவர் மாதவன், எப்படி உங்க கூட?! எனக் கேட்கிறார் இந்த நெட்டிசன்...

மாற போற கதையை!

தமிழகமே பார்.. இனி தீபா ஜெயலலிதாவாக மாற போற கதையை!! என்கிறார்..

நீங்கள் தான் கூறவேண்டும்

#தீபா எதற்காக போயஸ் கார்டன் வந்திருக்கிறீர்?? அதை, நீங்கள் தான் கூறவேண்டும்.. என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
netizens making fun of Deepa. Netizens teasing Deepa for accusations.
Please Wait while comments are loading...