இன்னைக்கு மொட்டைமாடில தூங்கப்போறேன்னு போஸ்ட் போட்டது தப்பாப்போச்சுடேன்.. 40 கொசு லைக்ஸ் போட்ருக்கு!
சென்னை : இரவானால் மன அழுத்தத்தால் தூங்க முடியவில்லை என நினைத்தால், கொசுவும் அது பங்கிற்கு வருகிற கொஞ்சநஞ்ச தூக்கத்தையும் விரட்டி விடுகிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
முன்பெல்லாம் மாலையானால்தான் கொசுக்கள் வீடுகளுக்குப் படையெடுக்கும். அதனாலேயே பல வீடுகளில் மாலையில் சிறிதுநேரம் கதவை அடைத்து வைத்து, 'இந்த வீட்ல ஆளுங்க இல்லப்பா..' என கொசுக்களை ஏமாந்துபோகச் செய்வார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. மனிதர்களைவிட கொசுக்கள் இன்னும் ஸ்மார்ட்டாக சிந்திக்கின்றன.
வெளியில் சென்றால்தானே மாலையில் வீட்டுக்குள் வர வேண்டும் என, வாடகை தராமலேயே நம் வீட்டில் அவைகளும் ஒரு உறுப்பினராகி விடுகின்றன. இப்படி வீட்டுக்குள்ளேயே இருப்பதால், நேரம் காலம் பார்க்காமல், பசிக்கும் போதெல்லாம் பிரிட்ஜுக்குள் இருக்கும் சாப்பாட்டை எடுத்து சாப்பிடுவதுபோல், யாரை வேண்டுமானாலும் கடித்து இரத்தத்தை உறிஞ்சிக் கொள்கின்றன.
இரவில் மக்கள் தூக்கம் வராமல் தவிக்க, மன அழுத்தம் ஒரு காரணமென்றால், மற்றொரு காரணம் இந்தக் கொசுக்கள்தான். அதுவும் மழைக்காலம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். காதுக்கு அருகே வந்து அவர்கள் பாடும் பாட்டை, காது கொண்டு கேட்க முடிவதில்லை.
இப்படி கொசுக்களால் தாங்கள் படும் பாடுகளை சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
3.2 கோடி கொசுக்களை ஊருக்குள் விடப் போகும் கூகுள்! பின்னணியில் மெகா ஸ்கெட்ச்! அமெரிக்கா அனுமதிக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications