மனசு நல்லா இருந்தா எல்லாமே நல்லா இருக்கும்!
எப்பவும் உங்க மனசை சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். நோயற்ற வாழ்வு வேண்டுமென்றால் உங்கள் மனநலத்தை நீங்கள் சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்று உலகம் முழுவதும் உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது.

உடல்நலத்தின் மீது அக்கறைக் காட்டும் பலர் ஏனோ மனநலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உங்கள் மனதில் ஏற்படும் கோபம் விரக்தி துக்கம் போன்றவைகளால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. அதனால் சுகர் இரத்த அழுத்தம் வந்து பெரும்பாலோனார் பாதிப்படைகின்றனர். உங்கள் மனதை நீங்கள் நினைத்தால் எப்போதும் சந்தோசமாக வைத்துக் கொள்ளலாம்.
எது நடந்தாலும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக் கொள்ளுங்கள். காலை முதல் இரவு வரை பம்பரமாகச் சுழலும் நீங்கள் உங்களுடைய வேலைகளை முந்திய நாள் இரவே மறுநாள் வேலைக்கான திட்டமிடல் வேண்டும். அப்பொழுது தான் டென்சன் இல்லாமல் நம் மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உடல்நலம் குன்றினால் மருத்துவமனை சென்று மருந்து வாங்கி உண்ணலாம் ஆனால் மனநலம் குன்றினால் நாம் தான் நம் சூழலை நமக்கேற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உங்களுக்காகச் செலவிடுங்கள். அது மனநலத்தை அதிகரிக்கும் யோகாவாக இருக்கலாம் அல்லது மனதுக்குப் பிடித்த பாடல்களைக் கேக்கலாம் அல்லது மனதுக்குப் பிடித்தவரோடு மனம் விட்டு பேசலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த உணவு வகைகளை உண்டு மகிழலாம்.
உடல்நலம் சரியில்லாதவர்கள் கூட மனபலத்தால் அவர்கள் உடல்நலம் சீராகி விடும். எப்பவும் மனசை சந்நோசமாகவும் ரிலாக்சாகவும் வச்சுக்கோங்க. உங்களுக்குப் பிடித்த செயல்களை செய்யுங்கள். பிடித்தவரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். துன்பங்களையும் துக்கங்களையும் தூக்கிப் போடுங்கள். கோபதாபங்களை விட்டொழியுங்கள்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பார்கள். கிடைத்தற்கரிய மானிடபா பிறவியில் பிறந்த நாம் எந்த ஒரு பிரச்சினையையும் மனதிற்குள்ளேயே பூட்டி வைக்காமல் அதை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கூறுங்கள். எப்பவும் மனசை மகிழ்ச்சியா வச்சுக்கோங்க வாழ்க்கை இனிமையாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications