எம்.எஸ்.எம்.இ -இன் 45 நாள் விதி! தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? முக்கிய அம்சங்கள் இதோ!
எம்.எஸ்.எம்.இ -க்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது தான் 45 நாள் விதி. இந்த விதியானது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டம், 2006 மற்றும் வருமான வரிச் சட்டம் பிரிவு 43(B)h ஆகியவற்றின் கீழ் வருகிறது. இது வரவேண்டிய பணப் பட்டுவாடாவைத் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த, வாங்குபவர்களுக்கு 45 நாள் காலக்கெடுவை நிர்ணயம் செய்கிறது.
இந்த விதியின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்கும் அல்லது சேவை பெறும் எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணத்தைச் செலுத்த வேண்டும். இந்த காலக்கெடுவானது பொருட்கள் அல்லது சேவை என எதுவாக இருந்தாலும், ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து 45 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு வேளை நிறுவனம் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யாவிடில், 15 நாட்களுக்குள் பட்டுவாடா செய்ய வேண்டும். இதனால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரிய அளவில் பயனடைகின்றன.

உற்பத்தி அதிகரிக்கும்!
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்குள் பணம் கிடைப்பதால், தேவையான மூலதனப் பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படுகிறது. மூலதனம் என்பது மட்டுமல்ல, எந்தவொரு வேலையையும் விரைவில் செய்ய முடியும். இது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதன் நிதி ஆரோக்கியத்திற்கும் இன்னும் நல்லது. மொத்தத்தில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும்.
சுருக்கமாக சொன்னால் அடுத்த முதலீட்டுக்கு என்ன செய்வது என எதிர்நோக்கியிருக்கும் நிறுவனங்களுக்கு, வரவேண்டிய தொகையானது தாமதமாகாமல் சரியான நேரத்தில் கிடைத்தால், அதை மறு முதலீடு செய்து, உற்பத்தியை தொடர்ந்து அதிகரிக்க முடியும். மொத்தத்தில் நிறுவனத்தின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். நிதி நெருக்கடியை குறைக்கும். அதேசமயம் எம்.எஸ்.எம்.இ-களின் நம்பிக்கையை அதிகரிக்கும். இதை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டது தான் இந்த 45 நாள் விதி.
வாங்குபவர்களுக்கு கெடு
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், வருமான வரி சட்டத்தின் பிரிவு 43(B)h, வாங்குபவரை குறித்த நேரத்தில் பணம் செலுத்த வலியுறுத்துகிறது. ஏனெனில் 45 நாட்களுக்கு மேல் பணம் தாமதித்தால், வாங்குபவர் தாமதமான தொகையை, செலவினமாக காட்டி வரி விலக்கு பெற முடியாது. மேலும் அந்த செலவினத்திற்கு வரி விலக்கு எந்த ஆண்டில் அந்த தொகை செலுத்தப்படுகிறதோ, அந்த ஆண்டில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
உதாரணத்திற்கு 2024 - 25ம் நிதியாண்டில் (மார்ச் 31-க்குள்) ஒரு எம்.எஸ்.எம்.இ நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை 45 நாட்களுக்குள் செலுத்தவில்லை. அதை ஒரு மாதம் தள்ளி அதாவது அடுத்த நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் தான் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். அந்த செலவை 2024 - 25ம் நிதியாண்டில் காட்ட முடியாது. இது வாங்குபவரின் வரி பொறுப்பை அதிகரிக்கலாம். மேலும் 45 நாட்களுக்கு பிறகும் பணம் செலுத்த தவறினால், வாங்குபவர் நிலுவை தொகைக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை விட மூன்று மடங்கு கூட்டு வட்டி செலுத்த கட்டுப்பட்டவர். இந்த வட்டி தொகையை வாங்குபவர் தனது செலவினமாக காட்டி வரி விலக்கு கோர முடியாது.
45- நாட்களை தாண்டினால் என்ன செய்வது?
வாங்குபவர்கள், 45 நாட்கள் தாண்டியும் எம்.எஸ்.எம்.இ -க்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த முடியவில்லை என்றால், MSEFC எனப்படும் மைக்ரோ அண்ட் ஸ்மால் எண்டர்பிரைசஸ் ஃபெசிலிட்டேஷன் கவுன்சில் மூலம் புகார் அளிக்கலாம். அப்படி இல்லாவிட்டால் சாமாதான் போர்ட்டல் (MSME samadhaan portal) மூலம் (https://samadhaan.msme.gov.in/MyMsme/MSEFC/admin_odr.aspx) மூலம் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும் போது, வாங்குபவருக்கு வழங்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான ஒர்க் ஆர்டர் மற்றும் ரசீது ஆகியவற்றின் நகல்களை சமர்பிக்க வேண்டும்.
கடனில் பிரதிபலிக்குமா?
45 நாள் விதியானது எம்.எஸ்.எம்.இ -க்களுக்கு மறைமுகமாகவும் சில சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த விதியால் எம்.எஸ்.எம்.இ -க்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியானது சரியான நேரத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் அதன் வலுவான பணப்புழக்கத்தை உறுதி செய்கிறது. மேலும் சிறு நிறுவனங்களின் வருமானம் முன்கூட்டியே கணிக்க கூடியதாகவும், நிலையானதாகவும் இருக்கும். இதனால் ஒரு எம்.எஸ்.எம்.இ நிறுவனத்தின் கடன் தகுதியும் உயர்வாக இருக்கும், இது கடன் பெறுவதை எளிதாக்குகிறது. எளிதில் வங்கிகள் கடனுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பளிக்கலாம்.
இதை உறுதி செய்து கொள்ளுங்கள்?
மேற்கண்ட அனைத்து சலுகைகளையும் ஒரு எம்.எஸ்.எம்.இ நிறுவனம் பெற வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட நிறுவனம் கட்டாயம் உதயம் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்த நிறுவனங்களுக்கு மட்டுமே 45 நாள் விதி, பிணையம் இல்லா கடன், மானியம் உட்பட பல சலுகைகள் கிடைக்கின்றன.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications