"அமைச்சர் நிர்மல் குமார் பற்றி Chatgpt-யிடம் கேட்டால் அதுவே குழம்பிவிடும் போல!" அமமுக அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் நிர்மல்குமார் இதுவரை எத்தனை கட்சிகளை மாறியுள்ளார் என்பது குறித்து அவரது அக்கம்பக்கத்தினரிடம் கேட்டால் அது கணக்கில்லை என சொல்வதாக டிடிவி தினகரனின் அமமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.

அதிமுகவும் திமுகவும் இணைந்தால் என்ன தவறு என கேட்டிருந்த தினகரன் அமைதியாக இருந்தால் மரியாதையாக இருக்கும் என அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு அமமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.

TTV Dinakaran

இதுகுறித்து அமமுக ஐடி விங் கூறியிருப்பதாவது: பலகட்சி பலராமன்,
உசிலம்பட்டியில் நிர்மல்குமாரின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம், " இது அவருக்கு எத்தனையாவது கட்சி", எனக் கேட்டால் அவர்களே, " அது கணக்கில்லை தம்பி", என்றே சொல்வார்கள். Chatgpt யிடம், "ஒருவேளை தவெக ஆட்சிக்கு வரவில்லையென்றால், நிர்மல்குமார் எந்த கட்சியில் சேர்ந்திருப்பார் எனக் கேட்டால், " Sorry cannot guess" என அதுவும் குழம்பித்தான் போகும்.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்கிற கோயபல்ஸ் சித்தாந்தத்தை உள்வாங்கி இருக்கும் தவெக, அவர்களின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக கோயபல்ஸையும் சேர்க்க வேண்டும் என்பது எங்களின் தாழ்மையான வேண்டுகோள்.

திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்ததால் தான், அதிமுக எம்எல்ஏக்கள், தவெக பக்கம் வருகிறார்கள் என நிர்மல்குமார் சொல்லி இருக்கிறார்?

அதுதான் உண்மையெனில், தவெகவுக்கு சட்டமன்றத்தில் ஆதரவளித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள், தங்களின் செயலுக்கு வருந்தி, கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் சேர்ந்தது ஏன் என்பதை நிர்மல்குமார் மக்களுக்கு புரிய வைப்பாரா?

ஆக, திமுகவுடன் கூட்டணி சேர அதிமுக முயற்சி செய்தது என்பது திட்டமிட்ட பொய் என்பதும், தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்களின் கோபத்தை மடைமாற்றம் செய்த சப்பைக்கட்டு என்பதும் புரிகிறது.

அதிமுகவுக்கு திரும்பிய சில எம்எல்ஏக்கள், தங்கள் மீதான தொகுதி மக்களின் கோபத்தை சமாளிக்க முடியாமலும், கட்சி நிர்வாகிகளின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமலும், வந்தவரை லாபம் என பேரம் பேசி விலை போனவர்களை தங்கள் பக்கம் இழுத்து, ஏதோ அதிமுகவையும் அமமுகவையும் மொத்தமாக தங்கள் பக்கம் இழுத்துவிட்டதாக பகல்கனவு காணும் தவெகவின் சிறுமைபுத்தி விரைவில் அம்பலம் ஏறும் என்பதை நிர்மல்குமார்கள் புரிந்து கொள்வது நல்லது.

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை வெற்றி பெறச் செய்த அந்தந்த தொகுதி மக்கள், அந்த எம்எல்ஏக்கள் தவெகவை ஆதரிக்க வேண்டும் என்றா வெற்றி பெற வைத்தார்கள்?

5 ஆண்டுகள் தங்களின் தொகுதிக்கான நலத்திட்டங்களை செய்வதற்கு தானே வாக்களித்தார்கள். தொகுதி மக்களின் எண்ணவோட்டத்தை புறந்தள்ளி, ஜனநாயகத்தை விலை பேசி கேலிக்கூத்தாக்கும் தவெக, தாங்கள் தூயசக்தி என சொல்லிக்கொள்வது, "ஹிட்லர் ஜீவகாருண்யத்தை பின்பற்றினார்", என்பது போல் உள்ளது.

விஜயை நம்பி வந்த சிலர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காருக்கு பாதுகாப்புக்கு நின்ற கேவலத்தை, பதவி ஆசையில் விஜயபாஸ்கர்கள் ஏற்கலாம், அவர்களை நம்பி வாக்களித்த தொகுதி மக்களும், கட்சி நிர்வாகிகளும் ஏற்கிறார்களா என்பதை நிர்மல்குமார் கேட்டு சொல்வாரா?

நாளையே தேர்தல் வைத்தாலும், 200 தொகுதிகளில் வெல்வோம் என சொல்லிக்கொண்டே, மற்ற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் தப்பிலித்தனத்தை செய்யும் தவெக, தமிழக வரலாற்றில் கறைபடிந்த கட்சிகளில் குறுகிய காலத்தில் முதலிடம் பெற்று சாதனையை படைத்திருக்கிறது என்பது நிர்மல்குமாருக்கு புரிகிறதா?

தவெக முதலிடம் பெற்றது இதில் மட்டுமே. தவெகவின் இந்த உயரம் தகுதி மற்றும் கடின உழைப்பினால் கிடைத்தது அல்ல, தப்பித்தவறிய அதிர்ஷ்ட காற்றில் கோபரத்தில் ஒட்டிக்கொண்ட சருகுகள் தான் நீங்கள் அனைவரும்.

காலச் சக்கரத்தில் காற்றின் வேகம் குறையும் போது சருகுகள் தரையில் விழுந்து தடமில்லாமல் மக்கித்தான் போகும் என்பதை பலகட்சி பலராமன்கள் உணர்ந்து கொள்வது நலம். இவ்வாறு ஐடி விங் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+