Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி - டெண்டுல்கர் சதம் - தொடரை வென்றது இந்தியா

பரோடா:

தென் ஆப்பிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநிாள் கிக்கெட் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெண்டுல்கர் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றியை அடுத்து, தென் ஆப்பிக்காவுக்கு எதிரான ஒருநிாள் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.

புதிய கேப்டனாக கங்குலி பதவியேற்ற பிறகு தல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி பதாபாத்தில் நிடைபெற்ற 3-வது போட்டியில் தோல்வியுற்றது. இந்த போட்டியில் வென்றால் தொடரை வெல்லடியும் என்ற நலையில் இந்தியா விளையாடியது.

அதே நிேரத்தில் இந்த போட்டியில் வென்றாகவேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிக்கா விளையாடியது. இதனால் பதாபாத்தில் விளையாடி அணியே இங்கும் விளையாடியது. ஆனால், இந்திய அணியில் குமரன், சமீர் திகே ஆகியோருக்குப் பதிலாக ஸ்ரீநிாத், சபா கம் சேர்க்கப்பட்டிருந்தனர்.

டாஸ் வென்ற தென் ஆப்பிக்க அணி கேப்டன் குரோனியே தலில் பேட் செய்வது எனத் தீர்மானித்தார். கிர்ஸ்டன், கிப்ஸ் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். துவக்கத்திலேயே இருவரும் அடித்து விளையாடினர். இருவரும் தல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிக்க வீரர்களை அவுட்டாக்க பந்து வீச்சாளர்களை இந்திய கேப்டன் கங்குலி மாற்றி மாற்றிப் பார்த்தார்.

இந் நலையில், 37 ரன்கள் எடுத்திருந்த கிப்ஸ், ஜோஷி வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ லம் அவுட்டானார். அதன் பிறகு வந்த காலிஸ், கிர்ஸ்டனுடன் சேர்ந்து விரைவாக ரன் குவித்தார். கிர்ஸ்டன் 72 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் குரோனியே 26 ரன்களும் எடுத்தார். காலிஸ் அவுட்டாகாமல் 81 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிக்க வீரர்கள் கடைசி 10 ஓவர்களில் 78 ரன்கள் குவித்தனர். இந்திய அணியில் ஜோஷி 2 விக்கெட்டுகளையும், ஸ்ரீநிாத், கும்ளே இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இறுதியாக தென் ஆப்பிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.

50 ஓவர்களில் 283 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடினமான இலக்கை நிாேக்கி இந்தியா களமிறங்கியது. வழக்கமான டெண்டுல்கர், கங்குலி இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக வந்தனர்.

கங்குலி வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார். எதிர் திசையில் டெண்டுல்கர் நதானமாக விளையாடினார். தென் ஆப்பிக்க பந்து வீச்சாளர்களின் பந்துகளை விளாசி அடித்து கங்குலி ரன்கள் குவித்தார்.

கங்குலி- டெண்டுல்கர் இருவரும் தல் விக்கெட்டுக்கு 153 ரன்கள் குவித்தனர். 87 ரன்கள் எடுத்த நலையில் கங்குலி அவுட்டானார். அவருக்குப் பிறகு வந்த திராவிட் 3 ரன்கள் எடுத்த நலையில் அவுட்டானார். ஆனால், அடுத்து வந்த அசாருதீன், டெண்டுல்கருடன் சேர்ந்து பொறுமையாக விளையாடினார்.

அசாருதீன் துணையுடன் மறுனையில் டெண்டுல்கர் தனது அதிரடி ஆட்டத்தைத் துவக்கினார். இந் நலையில் ஒரு நிாள் போட்டியில் தனது 25 சதத்தை டெண்டுல்கர் எட்டினார். இந்த ஜோடியைப் பிக்க குரோனியே பல யற்சிகளை மேற்கொண்டார்.

122 ரன்கள் எடுத்த நலையில் டெண்டுல்கரும், 39 ரன்கள் எடுத்த நலையில் அசாருதீனும் அவுட்டானார்கள்.

இந் நலையில், கடைசி இரு ஓவர்களில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய நலையில் இந்தியா இருந்தது. 49-வது ஓவரை பொல்லாக் வீசினார். இந்த ஓவல் ஜடேஜாவும் அடுத்து வந்த ஜோஷியும் அவுட்டானார்கள்.

கடைசி ஓவல் இந்தியா 6 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. பரபரப்பான மற்றும் க்கியமான கடைசி ஓவரை வீச யாரை அழைப்பது என்று குரோனியே சற்று திணறினார். பின்னர் இக்கட்டான நிேரத்தில் சிறப்பாகப் பந்து வீசி அணிக்குப் பலறை வெற்றி தேடித் தந்த காலிஸை பந்து வீச அழைத்தார் குரோனியே.

ராபின் சிங்கும், சபா கம் களத்தில் இருந்தனர். தல் இரு பந்துகளில் 2 ரன்கள் வந்தன. 3-வது பந்தை ராபின் சிங் தூக்கி அடிக்க அதை குளூசனர் பிடிக்கத் தவறினார். அந்த பந்தில் இந்திய வீரர்கள் ஒரு ரன் எடுத்தனர். 4-வது பந்தில் சபா கம் ஒரு ரன் அடித்தார். இரு பந்துகளில் இரு ரன்கள் தேவை என்ற நலையில், 5-வது பந்தை எதிர் கொண்ட ராபின் சிங், அதை மிட்விக்கெட் திசையில் அடித்து இரு ரன்கள் சேர்த்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

இறுதியாக, 49.5 ஓவல் 6 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் லம் தென் ஆப்பிக்காவுக்கு எதிரான ஒருநிாள் போட்டித் தொடரை இந்தியா வென்றது. தற்போது அது 3-1 என்ற கணக்கில் ன்னிலையில் உள்ளது. 5-வது மற்றும் இறுதிப் போட்டி நிாக்பூல் ஞாயிற்றுக்கிழமை நிடைபெறுகிறது.

122 ரன்கள் குவித்த டெண்டுல்கர் ஆட்ட நிாயகனாக அறிவிக்கப்பட்டார்.

டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு ஒருநிாள் தொடர் வெற்றி பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. டெண்டுல்கருக்குப் பிறகு கேப்டன் பொறுப்பேற்ற கங்குலி தான் தலைமையேற்ற தல் தொடரையே வெற்றி பெற வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு தான் விளையாடிய 4 போட்டிகளிலும் அவர் சிறப்பான மற்றும் அதிரடி ஆட்டத்தின் லம் அதிக ரன்களைக் குவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+