ஆட்டத்தை ஆரம்பிக்கும் ரிஷப ராசி.. ஆடி மாதத்தில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. முழு பலன்கள்

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத ராசி பலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் ரிஷப ராசிக்கு கிடைக்கும் பலன்களை விரிவாக காணலாம்.

ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர்.

aadi-month-zodiac-sign-rishabam-rasi-people-will-get-good-fortuneds-and-luck-in-this-month

சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் ரிஷப ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி மற்றும் லக்னத்திற்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் நன்மை ஏற்படும். தொழிலே இல்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இனி ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம் வியாபாரம் விஷயத்திலும் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் நீங்கும்.

கவனம்

குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ளும் அமைப்பு உள்ளது. பெரிய மனிதர்களை சந்திக்கும் பாக்கியம் ஏற்படும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். பயணங்களின்போது புதிதாக யாராவது உங்களுக்கு அறிமுகமானால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஜென்மத்தில் குரு, ராசியில் செவ்வாய் இருப்பதால் கவனம் தேவை.

கோபம் வேண்டாம்

மற்றவர்களிடம் கோபப்படுவது, எதிர் பாலினத்தவரிடம் சண்டை போடுவதை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கூடா நட்பால் பிரச்சனை வரும் என்பதால் கவனம் தேவை. சம்பள உயர்வில் இருந்த தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். உத்தியோகத்தில் மாற்றத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரும். உங்களுடைய செல்வாக்கு கூடும்.

தொழிலில் முன்னேற்றம்

தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நல்ல வரன்கள் கிடைக்கும் அமைப்பு உள்ளது. குடும்பத்தில் புதிய வரவுக்குண்டான நல்ல செய்திகள் வந்து சேரும்.

தடை நீங்கும்

பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த விஷயங்கள் எல்லாம் பனிபோல விலகும். பிள்ளைகளுக்கான பணங்கள் உங்களைத் தேடி வரும். ஆடி மாதம் உங்களை மேன்மை செய்ய காத்திருக்கிறது. சோம்பலைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவது அற்புதமான ஏற்றங்களைக் கொடுக்கும். மகான்கள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் அக்கறை அவசியம். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை தொடர்பான பாதிப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவரின் உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிறிய பாதிப்புகள் தென்பட்டாலும் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+