திமுக- அதிமுக கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள் "இந்த 2 பேர்"தான்! நிர்மல் குமார் விமர்சனம்
சென்னை: திமுக அதிமுக கூட்டணி ஒருங்கிணைப்பாளர்களாக அனிதா ராதாகிருஷ்ணனும் கே.டி.ராஜேந்திர பாலாஜியும் இருப்பார்கள் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து நிர்மல் குமார் கூறியிருப்பதாவது: அதிமுகவினர் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குதிரை பேர விவகாரத்தில் செந்தில் பலாஜிக்கு நெருங்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததை விரும்பாமல்தான் அதிமுகவினர் தவெகவில் இணைகிறார்கள். இப்போது வரை தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக திமுக- அதிமுக முயற்சித்து வருகிறார்கள். சிபிஐ எப்படி குதிரை பேர குற்றச்சாட்டை விசாரிக்க முடியும்?
டைம் பாஸுக்காக சிபிஐக்கு திமுக முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு நிர்மல் குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: உப்பூர் அனல்மின் நிலையத்தை செயல்படுத்த போகிறோம். அதை ஆய்வு செய்துவிட்டு எந்த மாதிரியான திட்டங்களுக்கு செய்ய போகிறோம் என்பதை ஆலோசித்து முடிவு எடுப்போம்.
சென்னையில் மின்தடை என்பது கேபிள் அறுந்துவிழுவதால்தான் நடைபெறுகிறது. இது மாநகராட்சியில் செய்யும் வேலைப்பாடுகளால் அறுந்து விழுவதுதான். மற்றபடி மின் வெட்டுக்கு எந்த பெரிய பிரச்சினையும் காரணம் அல்ல!
கடந்த ஒரு வாரமாக சென்னையில் வெப்பநிலை உயர்ந்துள்ளதால் நமது மின்தேவையும் அதிகமாக இருக்கிறது. எண்ணூர்- வடசென்னை அனல் மின் நிலையத்தால் அப்பகுதி மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும், அதில் எந்த மாற்றமும் இருக்காது. லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் மாற்றப்பட்டது முதல்வர் அலுவலகம் தொடர்புடைய விஷயம். ஆளுநர் குலக் கல்வி குறித்து பேசலாம். அது அவரது விருப்பம். ஆனால் தமிழர அரசின் கொள்கை மாறாது.
அரசு வழக்கறிஞர் நியமனம் ஒரு சில பகுதிகளில் மட்டும் நிலுவையில் உள்ளது. 80 சதவீத நியமனங்கள் நிறைவடைந்துள்ளன. மின்வாரியம் ஒரு போதும் தனியார்மயமாக்கப்படாது என நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக- திமுக இணைவது குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகிறது. முதல்வர் விஜய்யும் இரு கட்சிகளும் கூட்டுதான். உள்ளாட்சித் தேர்தலில் இருவரும் இணைந்து போட்டியிடுவார்கள் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுக- திமுக கூட்டணி குறித்த விவாதங்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து விருதுநகரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பதாவது: அதிமுக என்பது பல துரோகங்களை கடந்து வந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பேரியக்கம்.
அதிமுக தொடங்கி 53 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் இளைஞர்கள் பட்டாளம் நிறைந்த கட்சியாகவே திகழ்கிறது. விஜய் ஒரு நடிகர் என்ற காரணத்திற்காக கொஞ்சம் கூடுதலாக வாக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன. விஜய்க்கு மிகப் பெரிய அலை வீசியிருந்தால் அவர் மெஜாரிட்டி வெற்றியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி பெறவில்லை.
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மட்டும்தான் தமிழ்நாட்டில் பலமான கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள். எந்த நேரம் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறதோ அந்த நேரம் தவெக அரசு முடிவுக்கு வந்துவிடும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார். அது போல் அனிதா ராதாகிருஷ்ணனோ, தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பார் என தெரிவித்திருந்தார்.















Click it and Unblock the Notifications