வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காந்தி சமாதியில் பில் கிளிண்டன் அஞ்சலி
புது தில்லி:
புது தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு அமெக்க அதிபர் பில் கிளிண்டன் செவ்வாய்க்கிழமை சென்று அஞ்சலி செலுத்தினார்.
சுமார் 30 நமிட நிேரம் சமாதி இருக்கும் பகுதியைச் சுற்றிப் பார்த்த கிளிண்டன், அந்த இடம் மிகவும் அமைதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
காலில் அணிந்திருந்த ஷூக்களை கழற்றி வைத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட கிளிண்டன், சமாதியில் இசைக்கப்பட்ட பக்திப் பாடல்கள் பற்றி கேட்டுத் தெந்து கொண்டார். கிளிண்டனுடன் அவரது மகள் செல்சா, அமெக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட், வர்த்தக அமைச்சர் வில்லியம் டேலி, இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அஜித் பாஞ்சா உள்ளிட்ட 28 பேர் கொண்ட குழு காந்தி சமாதிக்கு வந்திருந்தது.
கிளிண்டனை, காந்தியவாதி நர்மலா தேஷ்பாண்டே வரவேற்றார். பின்னர் காந்தி சமாதி மீது ரோஜா மலர் இதழ்களைத் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது பெயரை கிளிண்டன் எழுதினார்.
ராஜ்காட் சமாதி கமிட்டி சார்பில் காந்தி பயன்படுத்தியதைப் போன்ற நூற்புச் சக்கரம் உள்பட ஏராளமான நனைவுப் பசுகள் கிளிண்டனுக்கு வழங்கப்பட்டன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications