வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
குடிசைகள் அகற்றத்தை எதிர்த்து டெல்லியில் வி.பி.சிங் விடிய விடிய போராட்டம்
டெல்லி:
டெல்லி, வாசிர்பூர் பகுதியில் 15,000 குடிசைகள் அகற்றப்படுவதைக் கண்டித்து ன்னாள் பிரதமர் வி.பி.சிங், அப்பகுதியில் இரவு ழுவதும் தங்கிப் போராட்டம் நிடத்தினார்.
வாசிர்பூர் பகுதியிலுள்ள சந்திரசேகர் ஆசாத் காலனியில் அமைக்கப்பட்டுள்ள 15,000 குடிசைகளை அகற்ற ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதை அறிந்த சிங், வெள்ளிக்கிழமை இரவு அங்கு விரைந்தார். குடிசைகளை அகற்றுவதைக் கண்டித்து அங்கு அமைதிப் போராட்டத்தில் இறங்கினார்.
அப்பகுதியில் உள்ள குடிசைவாசிகளிடம் அவர் பேசுகையில், டெல்லியுள்ள நிாற்பது லட்சம் குடிசைவாசிகளும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.
கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் சன்னியாசத்தில் இருந்து வரும் வி.பி.சிங் தல் றையாக பொதுப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். சிங்குடன், ஏ.பி.பரதன், ராஜ் பப்பர் ஆகிய எம்.பிக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். வெள்ளிகிழமை இரவு காலனி பகுதியில் ஒரு பொதுக் கூட்டத்திலும் சிங் கலந்துகொண்டு பேசினார்.
சிங் பேசுகையில், குடிசைப் பகுதிகளுக்கு நவாரணம் அளிக்கும் பணியில் அரசு ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக அவர்கள் வசிக்கும் குடிசைகளை இடிப்பதில் மட்டும் வேகம் காட்டி வருகிறது. அரசின் நிடவடிக்கையை நிாங்கள் அமைதியான றையில் எதிர்க்கிறோம். வன்றையில் எங்களுக்கு நிம்பிக்கையில்லை. எங்களைத் தாக்கி விட்டு குடிசையை இடிக்கட்டும்.
வாசிர்பூர் பகுதியில் குடிசைகளை அப்புறப்படுத்த வேண்டாம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இதுவரை பதில் இல்லை என்றார் அவர்.
இப்பகுதி குடிசைகள் அகற்றப்பட்டால் 30,000 பேர் பாதிக்கப்படுவார்கள் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெவித்தன.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
