வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்

சென்னை:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் கூட்டம் செவ்வாய்க்கிழமை சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மாலை 4.00 மணிக்கு நடக்கிறது.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க, பாஜக, மதிமுக, பாமக, தமிழக ராஜீவ் காங்கிரஸ், எம்ஜிஆர் கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன.

இக்கூட்டணியின் தலைவராக முதல்வர் கருணாநிதி உள்ளார். கடந்த தேர்தலில் சேலம் தொகுதியில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

இதையடுத்து அவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழப்பாடி ராமமூர்த்தி, பாமக நிறுவனர் ராமதாஸ் மேல் குற்றம் சாட்டியதுடன், அக்கட்சியின் மத்திய அமைச்சர்கள் பொன்னுசாமி, சண்முகம் ஆகியோர் மீதும் ஊழல் புகார்களைக் கூறினார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் வாழப்பாடியைக் கண்டித்து அவரது கொடும்பாவியை எரித்து பா.ம.கவினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இப்பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக செவ்வாய்க்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+