வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கொலம்பியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 21 பேர் சாவு

பொகோடா (கொலம்பியா):

கொலம்பியாவிலுள்ள பொகோடா வனப் பகுதியில் உள்ள இரு சிறு நகரங்களில் புகுந்த மார்க்சிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் நகர மேயர், சில போலீஸ்காரர்கள் உள்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த வார இறுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கொலம்பியா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொலம்பியா ஆயுதப் புரட்சிப் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் பெல்லவிஸ்டா, விஜியா டெல் பியூர்டர் ஆகிய இரு நகரங்களுக்குள்ளும் புகுந்தனர். அவர்களிடம் கையால் ஏவக் கூடிய சிறிய ஏவுகணைகள், தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியவை இருந்தன. சனிக்கிழமை இந்த நகரங்களுக்குள் அவர்கள் புகுந்தனர். ஞாயிற்றுக்கிழமை வரை அங்கு தாக்குதல் நடத்தினர்.

கொலம்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள நகரங்கள் இவை. அட்ரடோ ஆற்றின் இரு கரைகளிலும் இவை அமைந்துள்ளன. இந்த நகரங்களில், ஆயுதப் படை புரட்சியாளர்களின் எதிரிகள் அதிக அளவில் உள்ளனர். அவர்களை ஒழிக்கும் நோக்கத்தோடுதான் இங்கு அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த ஆண்டில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வரும் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முடிவுக்குக் கொண்டு வர அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சு நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 35,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த நிலையில் புதிதாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அட்ரடோ ஆற்றின் வழியாகத்தான் கொலம்பியாவிலிருந்தும், கொலம்பியாவுக்கும் போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. கடத்தலுக்கு மிகவும் வசதியான நீர் வழிப் பாதையாக இது விளங்குகிறது.

புதிய தாக்குதல் குறித்து அரசுத் தரப்பில் பெர்னாண்டோ அரிகிரோ கூறுகையில், விஜியா டெல் நிகர மேயர், ஆறு பொதுமக்கள் உள்பட 21 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 2 வயதுக் குழந்தையும் அடங்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+