தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
ராணுவத்தை வாபஸ் பெற்றால் போர் நிறுத்தம்: புலிகள் நிபந்தனை

லண்டன்:

யாழ்பாணத்திலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற இலங்கை அரசு முன்வந்தால் தற்காலிகமாக போரை நிறுத்தத் தயாராகஇருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதன்மூலம் பேச்சுவார்த்தைக்கும் வழி பிறக்கும் என புலிகள்அறிவித்துள்ளனர்.

லண்டணில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்பாணத்திலிருந்து அரசுப் படைகளை திரும்பப்பெற்றுக் கொள்ள அனுமதிக்கிறோம். இதற்காக தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தவும் தயாராக உள்ளோம். எங்களின் இந்தஅறிவிப்பை அரசு ஏற்றுக் கொண்டால் நிரந்தரமாகவே போரை நிறுத்த வாய்ப்பு கிடைக்கும். பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் தேசம்(தமிழ் ஈழம்) குறித்து அரசியல் தீர்வு காணலாம்.

ஆனால், எங்களின் இந்த அறிவிப்பை அரசு புறக்கணித்துவிட்டு யாழ்பாணத்தை விட்டு படைகளை திரும்பப் பெற மறுத்தால் மிகமிக கடுமையான விளைவுகள் ஏற்படும். பெரும் எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் உயிரிழப்பர்.

எங்களின் இந்த யோசனையை ஏற்றுக் கொள்வதாக அரசு அறிவித்தால் உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வரும். எங்களின்இந்த யோசனையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இதில் தாமதம் எதையும் செய்ய வேண்டாம்.

எங்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இலங்கை ராணுவத்தினர்யாழ்பாணத்திலிருந்து வெளியேற அனுமதிப்போம்.

இவ்வாறு புலிகள் தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர்.

யாழ்பாணத்தில் இப்போது சுமார் 40,000 இலங்கை ராணுவத்தினர் உள்ளனர். இந்தப் படையினரை விடுதலைப் புலிகள் சுற்றிவளைத்துள்ளனர். இவர்களை காப்பாற்ற படைகளை அனுப்பி உதவுமாறு இந்தியாவிடம் இலங்கை அரசு கோரியது. ஆனால்,இந்தியா மறுத்துவிட்டது.

இந் நிலையில் யாழ்பாணத்தில் சிக்கியுள்ள வீரர்களுக்கு நிறைய ஆயுதங்கள் வழங்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.யாழ்பாணம் அருகே பலாலி விமான நிலையத்தை புலிகளிடமிருந்து காக்கும் பணியிலும் இலங்கை ராணுவத்தினர்ஈடுபட்டுள்ளனர். இந்த விமான நிலையம் புலிகளின் கையில் சென்றுவிட்டால், வட இலங்கையுடனான கடைசி தொடர்பையும்இலங்கை அரசு இழந்துவிடும்.

இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+