தமிழகத்தில் இன்று
சென்னை:
நாடு முழுவதும் 11ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அதிமுக கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் திங்கள் கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு;
விவசாயிகள், தொழிலாளர்களை பாதிக்கக் கூடிய மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து 11ம் தேதி நாடுமுழுவதும் பொதுவேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில்அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களானரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
உரம் விலை உயர்வு மூலம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு, அவர்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு கட்டுப்படியானவிலை தரப்படவில்லை.
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத உரிமை வழங்கப்படவில்லை. அவர்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கக் கோரியும்,14வது வயது வரை தரமான கல்வியை இலவசமாக வழங்கக் கோரியும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
சேலம் உருக்காலை போன்ற பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 784பொருட்களுக்கு சுங்கவரி குறைப்பு உள்பட அரசின் தவறான அணுகுமுறைகள், சாதாரண மக்களை பாதிக்கும் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால்ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கும் என்பதை வலியுறுத்தி 11ம் தேதி நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்தில் அதிமுக பங்கேற்கும்.
இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications