தமிழகத்தில் இன்று
சென்னை:
ரூ.340 கோடி திட்ட மதிப்பீட்டில் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டு வரும் ""டைடல் மென்பொருள் பூங்கா (டைடல் பார்க்)ஜூலை 4ம் தேதி பிரதமர் வாஜ்பாய் திறந்து வைக்கிறார்.
தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் திங்களன்று நடைபெற்றது. அதற்கு முதல்வர்பதிலளித்தபோது, இந்த தகவலை தெரிவித்தார்.
1998ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் தமிழக அரசு நிறுவனங்களான "டிட்கோ மற்றும் "எல்காட் ஆகியவை இணைந்து ரூ.340கோடி திட்ட மதிப்பீட்டில் டைடல் மென்பொருள் பூங்கா ஒன்றை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தரமணியில்8ஏக்கர் பரப்பளவில் 12 லட்சத்து 80 ஆயிரம் சதுர அடி கட்டடம் 14 தளங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டு வரும் டைடல்பூங்காவிற்கு 21.8.98 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த பூங்காவில் தரை வழியாகவும், செயற்கைக்கோள் வழியாகவும், நுண்ணலைகள் வழியாகவும் செய்திகளை பரிமாறிக்கொள்வதற்கு ஏற்ப இக்கட்டடத்தின் மேல் தளத்தில் "வி.எஸ்.என்.எல், தொலைத்தொடர்புத் துறை (டிஓடி), மற்றும் சாப்ட்வேர்டெக்னாலஜி பார்க் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள்பிரத்யேகமான முறையில் வசதிகளை உருவாக்கி வருகின்றன.
இந்தப் பூங்காவிற்கு 6 ஆயிரம் டன் திறன் கொண்ட குளிர்பதன வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு அமையும்"தெர்மல் எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் உலகிலேயே மூன்றாவது பெரிய சிஸ்டம் ஆகும். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் ஒன்றும்,ஜப்பான் நாட்டில் ஒன்றும் பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளன.
இவை மட்டுமின்றி உலகத் தரத்திலான நவீனமயமாக்கப்பட்ட ஏராளமான வசதிகள் இந்த பூங்காவில் அமைந்துள்ளன.
ஐதராபாத், பெங்களூரில் உள்ள மென்பொருள் பூங்காக்களை விட இது மிகப் பெரியது. இதுவரை பூங்காவின் 50 சதவீத இடம்உலகின் பிரசித்தி பெற்ற மென்பொருள் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் முதலாவதாக தமிழ்நாடு மென்பொருள் நிதி என்ற ஒன்றை டிட்கோ நறுவனம் தொடங்கி, இதுவரை 4 மென்பொருள்தொழில் முனைவோருக்கு 8 கோடி ரூபாய் முதலீட்டுதவி வழங்கியுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications