தமிழகத்தில் இன்று
சென்னை:
திருபுவனத்தில் திமுக தொண்டருடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தமாகா தொண்டர்மரணம் குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
சட்டசபையில் வியாழக்கிழமை அன்று இப்பிரச்னை பற்றி தமாகா உறுப்பினர் ஞானசேகரன், இந்திய கம்யூனிஸ்ட்உறுப்பினர் சிவபுண்ணியம், அதிமுக உறுப்பினர் தாமரைக்கனி, திருபுவனம் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம்ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, ""இச்சம்பவம் 4.5.2000 அன்று நடந்துள்ளது. திருபுவனம் பட்டுக்கூட்டுறவு சங்க கட்டடம் முன்பு திமுக தொண்டர் குமார் என்பவர் குடிபோதையில் இருந்துள்ளார். அவருடன்தமாகா தொண்டர் அரிதாஸ் என்பவர் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதற்கு 4 நாட்களுக்கு பிறகு அரிதாசின் அண்ணன் சுந்தரமூர்த்தி, திருவிடைமருதூர் போலீசில் புகார்செய்துள்ளார். தனது தம்பியை அடையாளர் தெரியாத சிலர் கடத்திச் சென்று விட்டதாக கூறினார்.
அதற்கு அடுத்த நாள் அப்பகுதியில் உள்ள குட்டையில் அரிதாசின் பிணம் கிடந்துள்ளது. உடலில் பெரியகாயங்கள் இல்லை. சிராய்ப்புகள் மட்டுமே இருந்ததால், சந்தேகத்திற்குரிய மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இன்னும் பிரேத பரிசோதனை அறிக்கை வரவில்லை. ஆனால், கொலை சம்பவம் என்று கூறி சாலை மறியல்போராட்டம் நடத்தப்பட்டது. இதுபோன்ற போராட்டங்கள் மூலம் நல்லவர்கள் கைது செய்யப்படக் கூடிய நிலைமைஏற்படும் என்பதை போராடியவர்களும், தூண்டி விட்டவர்களும் உணர வேண்டும். எனினும் இச்சம்பவத்தில்பாரபட்சம் பார்க்காமல் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்றார் முதல்வர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications