தமிழகத்தில் இன்று
டெல்லி:
சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்பட இந்தியாவும், ஐரோப்பியயூனியனும் முடிவு செய்துள்ளன.
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் நகரில் ஜூன் 28-ம் தேதி முதலாவதுஇந்திய-ஐரோப்பிய யூனியன் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில்விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து இந்திய, போர்ச்சுகல் வெளியுறவுத்துறை செயலாள்கள் மட்டத்திலான கூட்டம் டெல்லியில் திங்கள்கிழம நடந்தது.
இதில் இந்தியத் தரப்பில் லலித் மான் சிங் மற்றும் போர்ச்சுகல் தரப்பில் ஜோவோசல்குய்ரோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டம் குறித்து, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் லலித் மான்சிங் பின்னர்செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான இந்திய உயர் மட்டக்குழு ஜூன் 29-ல் லிஸ்பன் செல்கிறது.
மாநாட்டில் போர்ச்சுகல் பிரதமரும், ஐரோப்பிய யூனியன் தலைவருமானஅந்தோணியோ குட்டரஸ் மற்றும் அமைப்பின் பிற பிரதிநிதிகள்கலந்துகொள்கின்றனர்.
இதுவரை ரஷியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் மட்டுமே,ஐரோப்பிய யூனியன், அரசியல், பொருளாதார, வர்த்தகம் தொடர்பான மாநாட்டைநடத்தியுள்ளது. தற்போது இந்தியாவுடன் மாநாடு நடத்தவுள்ளது.
சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படுவது தொடர்பாகமாநாட்டில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின்போது இதுதொடர்பாககூட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே நிலவும் உறவைமேம்படுத்துவது, அரசியல் பரிமாற்றங்கள், பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல், மனித உரிமைகள், போதைப் பொருள் போக்குவரத்து தடுப்புஆகியவற்றிலும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது என்றார் மான்சிங்.
சல்குய்ரோ பேசுகையில், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நிலவும் பாதுகாப்புத்தொடர்பான பிரச்சினைகள் குறித்து லிஸ்பன் மாநாட்டில் பேசப்படும்.
இந்தியாவுடன், ஐரோப்பிய யூனியன் பெரிய அளவில் வர்த்தகத் தொடர்புவைத்துள்ளது. இந்தியாவுக்கு பெருமளவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டைக்கொடுப்பதும் ஐரோப்பிய யூனியன்தான். 15 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுஒரே கரன்சியைப் பயன்படுத்தும் ஐரோப்பிய யூனியன், இந்தியாவுடன் பல்வேறுதுறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.
மாநாட்டிற்கு முன்பாக இந்திய, ஐரோப்பிய யூனியன் வர்த்தகக் கூட்டம் நடைபெறும்.இதில் 30 இந்திய மற்றும் 150 ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள்கலந்துகொள்ளவுள்ளன.
போர்ச்சுகல் வெளியுறவுத் துறை செயலாளர் ஜோவோ சல்குய்ரோவும் உடன்இருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications