தமிழகத்தில் இன்று
பிரீடவுன்:
சியர்ரா லியோனில் கடத்தப்பட்ட 500 ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாப்புப் படை வீரர்கள், அதிகாரிகளில் 119பேரை தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர்.
இவர்கள் கடந்த இரு வாரங்களாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வந்தனர். காட்டுப் பகுதியில் புதர்களில்இவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் சீருடைகளையும் ஆயுதங்களையும் தீவிரவாதிகள்பறித்துவிட்டனர்.
விடுவிக்கப்பட்டவர்களில் 93 அமைதிகாப்புப் படை வீரர்கள் சியர்ரா லியோன் தலைநகர் பிரீடவுன் வந்துசேர்ந்தனர். இவர்களில் 73 பேர் ஜாம்பியாவையும் 14 பேர் கென்யாவையும் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்ட 15நாட்களாக இவர்களுக்கு சரியான உணவு கூட கொடுக்கப்படவில்லை. மேலும் 43 பேர் பிரீடவுன் வருவதற்காகலைபீரியாவில் காத்துக் கொண்டுள்ளனர்.
முன்னதாக லைபீரிய ஜனாதிபதி சார்லஸ் டெய்லர் தீவிரவாத அமைப்பான புரட்சிகர ஐக்கிய முன்னணியிடம் பேசிஇவர்களை விடுவித்தார். பின்னர் லைபீரியாவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பிரீடவுனுக்கு அனுப்பிவைத்தார்.
ஆனால், இன்னும் தீவிரவாதிகளின் பிடியிலேயே உள்ள 347 ஐக்கிய நாடுகள் சபை ஊழயர்கள், வீரர்களின்நிலைமை என்னவென்று தெரியவில்லை. சியர்ரா லியோனின் அரசு ஆதரவுப் படைகள் தொடர்ந்து தீவிரவாதிகள்மீது தாக்குதல் நடத்தினால் இந்த 347 பேரின் நிலைமை மிகவும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications