தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் கல்வி கற்கிறார்கள் என்று சட்டஅமைச்சர் ஆலடி அருணா சட்டசபையில் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் கல்வி கற்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் கணக்கெடுத்துப் பார்த்ததில் ஆயிரத்து இருபத்தியிரண்டு பேர் கல்விகற்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
சிறைகளில் தெய்வபக்தி, தேசபக்தி, ஒழுக்கம் போன்ற அனைத்தையும் போதிக்கும் வகையில் பலநலத்திட்டங்களை அரசு திட்டமிட்டுள்ளது.
சிறைக் கைதிகள் அவர்களின் கலாச்சாரப்படி எந்தக் கடவுளை வேண்டுமானாலும் வேண்டிக்கொள்ளலாம்.சிறைக்குள் ஜாதிமத மோதல்கள் எதுவும் இல்லை. அனைவரும் மனிதர்கள் என்பதே கைதிகளின் பண்பாடாகஇருக்க வேண்டும்.
அவர்களின் குறைகளைக் கேட்பதற்கென்று அமைக்கப்பட்டிருந்த குழுக்கள் 1995 ம் ஆண்டு கலைக்கப்பட்டது.தற்போது மீண்டும் மூன்று மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து அங்கே கைதிகளின் குறை கேட்கும் குழு அமைக்கத்திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications