தமிழகத்தில் இன்று
புலிகள் தாக்குதல் தீவிரமடைகிறது; யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் ராணுவம் பின்வாங்கியது
கொழும்பு:
யாழ்ப்பாணம் நகரை நோக்கி விடுதலைப் புலிகள் வெகு வேகமாக முன்னேறி வருவதாகவும், யாழ். நகரின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கடும்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ராணுவம் பின் வாங்கி வருவதாகவும் இலங்கை ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள ராணுவத்தினரின் பல முகாம்களை குறிவைத்து புலிகள் கடுமையாக தாக்குதல் தொடங்கியுள்ளனர். இதைச் சமாளிக்கமுடியாமல் பல இடங்களில் ராணுவத்தினர் பின் வாங்கி விட்டனர். கடும் மூர்க்கத்துடன் புலிகள் தாக்குதல் தொடுப்பதாக ராணுவத்தின் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கடும் தாக்குதலை விடுதலைப் புலிகள் துவங்கினர். நாவற்குழி, தச்சன்தோப்பு ஆகிய இரு முக்கியயாழ்ப்பாணப் புறநகர்ப் பகுதிகளை அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றினர்.
தற்போது யாழ்ப்பாணம் நகரம் மற்றும் சாவகச்சேரிஆகிய இரு நகரங்களையும் நோக்கி விடுதலைப் புலிகள் வெகு வேகமாக முன்னேறி வருவதாகராணுவம் தெரிவித்துள்ளது.
மக்கள் மீது குண்டு வீசுவதாக புலிகள் மீது அரசு புகார்:
இதற்கிடையே, மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் விடுதலைப் புலிகள் குண்டு வீசுவதாக இலங்கை அரசு புகார கூறியுள்ளது. யாழ். நகரிலுள்ள 1லட்சம் பேரையும் வெளியேற்றும் விதத்தில் இப்படிச் செய்வதாகவும் அது கூறியுள்ளது.
அரசுத் தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஒளிபரப்பான செய்தியில், போரில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உணவுப்பொருட்களை எடுத்துச் சென்ற வாகன வரிசை மீது விமானப் படை குண்டு வீசித தாக்குதல் நடத்தியது. இதில் புலிகள் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டதாகதெரிகிறது.
ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பலிதா பெர்னாண்டோ கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும்கொழும்புத் துறை பகுதியில் கடும் சண்டை நடந்தது. இதில் புலிகள் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டது. ராணுவத்தினர் புலிகள் தாக்குதலைச் சமாளிக்கும்வகையில் புதிய இடங்களில் நிலை கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு சந்திரிகா கோரிக்கை:
இதற்கிடையே, போரை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
புதன்கிழமை புத்தரின் பிறந்தநாள் இலங்கையில் கொண்டாடப்பட்டது. இதுதொடர்பாக கொழும்பில் நடந்த நிகழ்ச்சியில் புத்த மத சாமியார்கள் மத்தியில்சந்திரிகாவின் செய்தி வாசிக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருந்ததாவது:
17 ஆண்டுகளாக அரசுடன் மோதி வருவதை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும். புத்தர் காட்டிய அமைதி வழியில்தான் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணவேண்டும் என்று புத்த மதத்தினரும், பிற மதத்தினரும் உணர்வார்கள். அமைதி, இரக்கத்தைப் போதித்த புத்தரின் போதனையைப் பின்பற்றி புலிகளும்பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.
புத்தரின் கொள்கையைப் பின்பற்றி, தமிழர்களும், பிற இனத்தவர்களும் சம உரிமையுடன், அந்தஸ்துடன் வாழ்வதற்கேற்ற வகையில் புதிய திட்டத்தைவிரைவில் இலங்கை அரசு கொண்டு வரும். அனைவருக்கும் உடன்பாடான வகையில் இந்த திட்டம் இருக்கும்.
விடுதலைப் புலிகள் உள்பட தனி நாடு கோரி போராடி வரும் யாருடனும் பேச அரசு தயாராக உள்ளது. ஆனால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் ராணுவம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்று அவர் கூறியிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications