தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா கூறினார்.
இவர் திங்கள்கிழமை மாலை பெங்களூரிலிருந்து சென்னை வந்தார். விமானநிலையத்தில் நிருபர்களிடம் பேசினார். நான் என் சொந்தக் காரணங்களுக்காகபெங்களூர் வந்தேன். இலங்கைக்குத் திரும்புகின்ற வழியில் சென்னை வந்துள்ளேன்.
இலங்கைப் பிரச்சனையில் ஏதாவது ஒரு வகையில் இந்தியா தலையிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இலங்கை எப்போதும் பேச்சுவார்த்தைக்குத்தயாராக உள்ளது. ஏற்கனவே இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு அதை விடுதலைப்புலிகள் ஏற்காமல் இருந்தனர்.
இப்பொழுது நிலைமை மிகவும் நெருக்கடியாக உள்ளது. சூழ்நிலைகள் நாளுக்குநாள் மாறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் எப்படிச்செயல்பட வேண்டும் என்றுயோசிக்க வேண்டும் என்றார்.
இவரிடம் தமிழகத்தில் பல கட்சிகள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றதே என்று கேட்டபோது, அது சரியல்ல. அப்படி ஆதரவாகப்பேசக் கூடாது. ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் டெல்லி அரசின் முடிவைத்தான் ஆதரிக்கின்றன என்றார்.
இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதால் தான் இந்தப் பிரச்சனை. தமிழர்களுக்கு சமஉரிமை வழங்க என்ன நடவடிக்கை எடுத்துஇருக்கிறீர்கள்? என்ற போது, இலங்கையில் பெரும்பான்மையான தமிழர்கள் வட மாகாணத்தில் இல்லை. அவர்கள் கொழும்பு மற்றும்தென்மாகாணங்களிலும் வெளிநாட்டிலும் தான் வாழ்கிறார்கள்.
வட மாகாணங்களில் இப்பொழுது தீவிரவாத அமைப்புகள் மட்டுமே உள்ளன. எனவே மனித உரிமைகள் பற்றிய பிரச்சனை இல்லை. இலங்கையில்உள்ள பல்வேறு அமைப்புகளும், இலங்கைப் பிரச்சனையில் முற்றிலும் தீர்வு காண இந்தியா உதவ முன்வர வேண்டும் என்று கோருகின்றன என்றார்இலங்கை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா.


Click it and Unblock the Notifications
