தமிழகத்தில் இன்று
வெல்லிங்டன்:
பிஜித் தீவில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட 30-க்கும் மேற்பட்டோர் இன்னும் புரட்சிக்காரர்களின்பிடியில் உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்து இந்தியரான பிரதமர் செளத்ரி உள்பட பல எம்.பிக்களையும்,அதிகாரிகளையும் ஜார்ஜ் ஸ்பீட்தலைமையிலான ஆயுதம் தாங்கிய புரட்சியாளர்கள் சிறை பிடித்தனர். ஆட்சியையும் கைப்பற்றினர்.
அவர்களைச் சமாதானப்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியைத் தழுவின. இந்த நிலையில், காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளர் டான் மெக்கின்னன், பிஜி அதிபர், புரட்சியாளர்கள் தலைவர் ஸ்பீட்ஆகியோரை புதன்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உண்மையைச் சொல்வதானால், இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நிலமை மிகவும்மோசமாக உள்ளது. விட்டுக் கொடுக்கும் போக்குடன் ஜார்ஜ் ஸ்பீட் இல்லை.
ஜார்ஜ் ஸ்பீட் கூறுகையில், கடந்த வாரம் வரை நான் யாரென்றே யாருக்கும் தெரியாது. இப்போது நான் உலகப் புகழ் பெற்று விட்டேன். இதை அப்படியேதக்கவைத்துக் கொள்ளப் போகிறேன் என்றார் என்று மெக்கின்னன் கூறினார்.
இதற்கிடையே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, பிஜித் தீவின் பழங்குடியினர் சபைத் தலைவர்கள் வியாழக்கிழமையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.புதியஇடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக அதிபர் ரத்து கமீசே மாராவிடம் அவர்கள் அறிக்கை கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது.
மெக்கின்னன் தொடர்ந்து கூறுகையில், பிடித்து வைத்துள்ள அனைவரையும் உடனடியாக, எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்று நானும்,ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் செர்ஜியோ வியரா டிமெல்லோவும், ஜார்ஜ் ஸ்பீடிடம் கோரிக்கை விடுத்தோம்.
பிரச்சினைக்கு என்ன தீர்வு காணப்பட்டாலும், அது 1997-ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்று பழங்குடித்தலைவர்களிடமும் கண்டிப்பாக கூறியுள்ளோம். இல்லாவிட்டால் சர்வதேச சமுதாயத்தின் கண்டனத்தைப் பெற வேண்டியதிருக்கும் என்றும் அவர்களைஎச்சரித்துள்ளோம்.
இரண்டு முறை தாக்கப்பட்டார் மகேந்திர செளத்ரி:
பிரதமர் மகேந்திர செள்திரியிடம் பேசுகையில், அவரும், அவரது மகனும் இரண்டு முறை புரட்சிக்காரர்ளால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார் என்றுமெக்கின்னன் கூறினார்.
இதற்கிடையே, இந்திய வம்சாவளியினர் யாரும் பிஜி அரசில் இடம் பெறுவதை அனுமதிக்க முடியாது என்று ஜார்ஜ் ஸ்பீட் பத்திரிகையாளர்களுக்கு விடுத்துள்ளசெய்தியில் கூறியுள்ளார். அதிபர் மாராவும், 1987-ல் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த முன்னாள் ராணுவத் தளபதி ரபுகாவும், பிஜி மக்களின் உணர்வுகளைஅடகு வைத்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications