மேட்ச் பிக்ஸிங்: அஜய் சர்மாவுக்காகக் காத்திருக்கிறது சிபிஐ
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங்கில் இந்திய வீரர்கள் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் மத்தியு புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), முன்னாள் இந்தியகிரிக்கெட் வீரர் அஜய் சர்மாவிடம் விசாரிக்க உள்ளது.
தற்போது லண்டனில் உள்ள அவருக்கு இது தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இந்தியா திரும்பியவுடன் அவரிடம் விசாரணை நடத்தப்படும்என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளருமான கபில் தேவ் மீதும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ்பிரபாகர் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். தற்போது இந்திய கிரிக்கெட் உலகையே அந்த குற்றச்சாட்டுகள் பெரிய புயலைக்கிளப்பியுள்ளது.
தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக சில கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் பிரபாகர் தெரிவித்தார். மேலும், தனது குற்றச்சாட்டுகளுக்குஆதரவாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் எடுக்கப்பட்ட பேட்டியின் வீடியோ ஆதாரத்தையும் அவர் வைத்துள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் சிபிஐயிடம் அந்த வீடியோ ஆதாரத்தைத் தரவுள்ளதாக பிரபாகர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் அஜய் சர்மா ஈடுபட்டுள்ளது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம்மேலும் விசாரணை நடத்தினால் இவ் வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று அவர்கள் கூறினர்.
பிரபாகர் குறிப்பிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதில் சித்து, வடேகர் ஆகியோரிடம் ஏற்கெனவேவிசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications