தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

-இந்தியாவில் -கர்-மா-பா: சீனாவுக்-கு கோபம்

பீஜிங்:

திபெத்திய புத்த மத குரு தலாய் லாமாவின் வாரிசு (கர்மாபா), இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பது குறித்து குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனிடம்,சீனா அதிருப்தி தெரிவித்தது.

சீனாவில் சுற்றுப்பயணம் சென்றிருக்கும் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், திங்கள்கிழமை சீன அதிபர் ஜியாங் செமீனைச் சந்தித்தார். அப்போது,குடியரசுத் தலைவரிடம், திபெத்திய மத குரு தலாய் லாமாவை, வெறும் மதத் தலைவராக மட்டும் சீனா பார்க்கவில்லை. ஒரு அரசியல்தலைவராகவும், ஒரு சிறு குழுவின் தலைவராகவுமே சீனா கருதுகிறது என்ற செமீன் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் இரு தலைவர்களும் பேசினர். சீனாவின் கவலைக்கு நாராயணன் பதிலளிக்கையில், திபெத்தை, சீனாவின் சுயாட்சி நிறைந்தபகுதியாகவும், தலாய் லாமாவை, ஒரு மதத் தலைவராகவுமே இந்தியா கருதுகிறது. அந்த நிலையில் மாற்றம் இல்லை. தலாய் லாமா இந்தியாவில்அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட இந்தியா அனுமதிக்காது என்று அவர் கூறியதாகத் தெரிகிறது.

கர்மாபா இந்தியாவில் இருப்பதை சீனா ஆட்சேபிக்கவில்லை. அவர் இந்தியாவில் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் அவர் இந்திய மண்ணில் இருந்துகொண்டு, சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட இந்தியா அனுமதிக்கக் கூடாது என்றும் குடியரசுத் தலைவரிடம் சீன அதிபர் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

இந்தியாவுக்குப் பாராட்டு:

கர்மாபா விவகாரத்தை இந்தியா கையாண்ட விதத்திற்கு சீன அதிபர் பாராட்டு தெரிவித்தார். இந்த விவகாரத்தை மிகவும் நுணுக்கமாக கையாண்டதற்குகுடியரசுத் தலைவரிடம் சீன அதிபர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இரு தலைவர்களின் சந்திப்பின்போது அணு ஆயுத சோதனை குறித்து பேசப்படவில்லை என்று சீன அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலானபிரச்சினைகளில் இந்தியாவின் அணு ஆயுத சோதனை குறித்த விவகாரத்தை சேர்க்க சீனா விரும்பவில்லை என்பதையே இது காட்டுவதாக அரசியல்நோக்கர்கள் தெரிவித்தனர்.

இதே போல, குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனனும், பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை குறித்த சீன அதிபரிடம் பேசவில்லை.

சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க குடியரசுத் தலைவர்கே.ஆர்.நாராயணன் யோசனை தெரிவித்தார். இதற்கு சீன அதிபர் ஒத்துக் கொண்டார். இதுதொடர்பான மேல் விவரங்கள் பின்னர் தீர்மானிக்கப்படும்என்று கூட்டத்திற்குப் பிறகு தெரிவிக்கப்பட்டது.

இதே போன்ற குழுக்களை, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே இந்தியா அமைத்துள்ளதாக தனது பேச்சின்போது நாராயணன்தெரிவித்தார்.

எல்லைப் பிரச்சினை:

இரு நாடுகளுக்குமிடையே நாற்பது ஆண்டுகளாக நிலவி வரும் எல்லைப் பிரச்சினை குறித்தும் பேச்சின்போது விவாதிக்கப்பட்டது. பரஸ்பர பேச்சுவார்த்தை,புரிந்து கொள்ளுதல், சுமூகத் தீர்வு ஆகியவற்றின் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று சீன அதிபர் ஜியாங் செமீன் யோசனை தெரிவித்தார்.

இந்த யோசனைக்கு இந்தியாவும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளதால் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்று இரு தலைவர்களும்பின்னர் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்குவது குறித்து சீனத் தலைவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.இப்பினும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மாற்றியமைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கருத்தை சீன அதிபர் ஏற்றுக் கொண்டார்.

ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில், பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும்என்றும் ஜியாங் செமீன் கருத்துத் தெரிவித்தார். ஜெர்மனி, ஜப்பான் உள்பட எந்த நாடானாலும், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இதுகுறித்து முடிவெடுக்கவேண்டும் என்றும் ஜியாங் தெரிவித்தார்.

காஷ்மீரில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் தீவிரவாத நடவடிக்கை குறித்து ஜியாங் செமீன் ஏதும் பேசவில்லை. அதேசமயம், சர்வதேச தீவிரவாதம்குறித்து மாநாடு நடத்தலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார். பயங்கரவாதம் என்பது சட்டவிரோதமானது. எனவே இதை யாராலும் ஆதரிக்கமுடியாது என்றார் அவர்.

இந்தியாவுக்கு வர அழைப்பு:

தனது சந்திப்பின்போது, சீன அதிபரை இந்தியாவுக்கு வருமாறு குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அழைப்பு விடுத்தார். அபபோது, ஏற்கனவே,பிரதமர் வாஜ்பாய் இதே போல அழைப்பு விடுத்துள்ளதாக, நாராயணனிடம் நினைவு கூர்ந்தார்.

சமீபத்தில் சீன பிரதமதர் ஸூ ரோங்போ இந்தியா வந்தபோது, அவர் மூலம் சீன அதிபருக்கு, வாஜ்பாய் அழைப்பு விடுத்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தியா வருவது குறித்து சீனத் தரப்பில் உடனடி பதில் தரப்படவில்லை.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+