தமிழகத்தில் இன்று
நஷ்-டத்-தில் மூழ்-கும் து-றை-மு-கங்-கள்
டெல்லி:
நாட்டில் உள்ள பெரும்பாலான போர்ட் டிரஸ்டுகள் கடுமையான நஷ்டத்தில்இயங்குவதாக சமீபத்திய தணிக்கைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தணிக்கைக் குழு (சி.ஏ.ஜி) அறிக்கை விவரம்:
நாட்டில் உள்ள பல போர்ட் டிரஸ்டுகள் பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றன. இதற்குநிர்வாகச் சீர்கேடுகள்தான் காரணம்.
தரைவழிப் போக்குவரத்துத் துறையின் உத்தரவின்படி, தவறான முறையில் குரூட்ஆயில் ஏற்றிச் செல்லும் சிறிய கப்பல்களைப் பழுதுபார்த்ததன் மூலம் கல்கத்தா போர்ட்டிரஸ்டுக்கு ரூ.11.40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், பழுதுபார்க்கும் இடத்தில்உள்ள கிரேன்களைப் பழுதுபார்க்காமல் இருந்தது மற்றும் சரியான முறையில் கட்டணம்வசூலிக்காமல் இருந்தது போன்ற காரணங்களால் கல்கத்தா போர்ட் டிரஸ்டுக்கு ரூ.2.87வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை போர்ட் டிரஸ்டில், கிரேன்களை வாடகைக்கு எடுத்தது மூலம் பெரும் நஷ்டம்ஏற்பட்டுள்ளது. கிரேன்களை விலை கொடுத்து வாங்கியிருந்தால் அது வாடகையைவிட குறைவாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மீன்பிடிதுறைமுகத்தில் மின் பகிர்மான முறையில் ஏற்பட்ட குளறுபடியால் போர்ட் டிரஸ்டுக்குதேவையில்லாமல் ரூ.51 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தவறான மின்கட்டணத்தால் ரூ.96 லட்சமும் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர்ட் டிரஸ்டுக்குள்வாடகைக்குப் பயன்படுத்தும் இயந்திரங்களின் கட்டணத்தை மறு ஆய்வுசெய்யாததால் கூடுதலாக ரூ.32 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொச்சி போர்ட் டிரஸ்டின் நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் ரூ.6.57 கோடிஇழப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை போர்ட் டிரஸ்டில் புதிதாகப் பதிக்கப்பட்ட பைப் லைன்கள் மீது பெயின்ட்அடிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட தவறான முடிவால் மொத்தம் ரூ.3.11 கோடிநஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தனியார் நிறுவன கப்பல்களை தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்த முறையான கட்டணம்வசூலிக்கப்படாததால், தூத்துக்குடி போர்ட் டிரஸ்டுக்கு ரூ.1.84 கோடி இழப்புஏற்பட்டுள்ளது.
இது தவிர மங்களூர் போர்ட் டிரஸ்ட், பாராதீப் போர்ட் டிரஸ்ட், விசாகப்பட்டினம்போர்ட் டிரஸ்ட் ஆகியவற்றிலும் மோசமான நிர்வாகத்தால் பல கோடி ரூபாய்க்குநஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தணிக்கைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications