தமிழகத்தில் இன்று
அம்ரிதா கல்வி நிறுவனம் துவக்கும் "அம்ரிதா பாரதி கல்வித்திட்டம்
கோவை:
அம்ரிதா கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனம், பாரதியார் பல்கலைக் கழகம் இணைந்து "அம்ரிதா பாரதி என்றபுதிய கல்வித் திட்டத்தைத் துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பப் படிப்புகள்அறிமுகப்படுத்தப்படுகின்றன.
கேரள மாநிலம் அம்ரிதபுரியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அம்ரிதா நிறுவனம், கோவைபாரதியார் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து "அம்ரிதா பாரதி என்ற கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ்கல்வியில் உயர் டிப்ளமோ பட்டப்படிப்பும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வரும் ஜூன் 15-ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பப் படிவங்கள் பாரதியார் பல்கலைக் கழகத்தின்தொலைதூரக் கல்வி நிறுவனம் வெளியிடுகிறது. தொலைதூரக் கல்வி மற்றும் நேர்முகக் கல்வித் திட்டமாக இதுஅறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கேரளாவில் கொச்சி, கொல்லம், பத்தனம் திட்டாஆகிய இடங்களில் இவை துவக்கப்படும்.
இதையடுத்து புனே, மைசூர் ஆகிய இடங்களில் நேர்முகக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இக்கல்வித்திட்டத்தில் பி.எஸ்.சி.,கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம், டிப்ளமோபட்டப்படிப்பில் ஒரு செமஸ்டருக்கு ரூ.8 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இது குறித்து பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இளங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் தமிழகம் முன்னணி வகித்து வருகிறது. இது குறித்து ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மட்டும் தான் சிறப்பானசெயல்திட்டங்களையும், கொள்கைகளையும் கொண்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து நிதிப் பற்றாக்குறை இருந்து வருவதால், புதிய கல்வித் திட்டங்களைசுயமாக நடத்த இயலவில்லை. எனவே, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கம்ப்யூட்டர் மற்றும்தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்படி, ஏற்கனவே எம்.எஸ்.சி., சாஃப்ட்வேர்டெக்னாலாஜி என்ற படிப்பை எஸ்.எஸ்.ஐ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்போது அம்ரிதா கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து "அம்ரிதா பாரதி என்ற கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த படிப்பு, வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் துவங்கும் என்று அர்தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications