சிட் பண்ட் மோசடியா? -ம-ழுப்-பு-கி-றார் மனோஜ் பிரபாகர்
டெல்லி:
சிட் பண்ட் பணத்தை மோசடி செய்திருப்பதாக புகார் கூறப்பட்டிருக்கும் அபேஸ் நிறுவனத்திற்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனது பெயரைஅபேஸ் நிறுவனத்தினர் தவறாகப் பயன்படுத்தி விட்டனர் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அபேஸ் சிட் பண்ட் நிறுவனம் மூலம் மனோஜ் பிரபாகர் பல கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக அவர் மீதுஉ.பி. போலீஸார் புகார் பதிவு செய்துள்ளனர். இந்தப் புகாரை தற்போது பிரபாகர் மறுத்துள்ளார்.
டெல்லியில் யு.என்.ஐ. செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
எனது நிறுவனம் தயாரிக்கும் காஸ்மெடிக் பொருட்களை உத்தர பிரதேச மாநிலத்தில் விற்பனை செய்யும் உரிமையை அபேஸ் நிறுவனம் பெற்றிருந்தது.காஸ்மெடிக் பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக உத்தகாண்ட், கார்வால் ஆகிய பகுதிகளுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தேன். மற்றபடிஎனக்கும், அபேஸ் நிறுவனத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. எனது பெயரை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி விட்டார்கள்.
அபேஸ் நிறுவன இயக்குநர் குழுவில் எனது பெயர் இல்லை. அபேஸ் குழுமத்தின் எந்தப் பிரிவிலும் எனக்குத் தொடர்பில்லை. எனது நிறுவனத்தின் பெயர் கூடநேச்சுரன்ஸ் என்றுதான் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, எனக்கும் அபேஸ் நிறுவனத்திற்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என்றுஅறிக்கை விடுமாறு, அந்த நிறுவன நிர்வாக இயக்குநரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
யாரோ சிலர் செய்த தவறுக்கு நான் ஏன் தண்டனை பெற வேண்டும். எனக்கு எதிரான புகார்கள் உள்நோக்கம் கொண்டவை. இத்தனை வருடங்களாகஇல்லாமல் இப்போது மட்டும் போலீஸார் என் மீது வழக்குப் போட துடிப்பது ஏன்.? என் மீதான புகார்களுக்கு ஆதாரம் இருந்தால், முதலிலேயேஅவர்கள் என் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக நான் கூறிய புகார்களால் பாதிக்கப்பட்டவர்கள், இப்போது என் மீது அவதூறு கற்பிக்க முயல்கிறார்கள் என்றார் அவர்.
இந்தூரிலும் வழக்கு:
இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலும் பிரபாகர் மீது சிட் பண்ட் நிறுவனம் பண மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை போலீஸார்புகார் பதிவு செய்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்புதான் உ.பி. போலீஸார் பிரபாகர் மீது சிட் பண்ட் பண மோசடி புகார் பதிவு செய்தனர். இந்த நிலையில் இதே போன்ற புகார் இந்தூரிலும்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட் பண்ட் நிறுவனம் மூலம் பணத்தைச் சுரண்டியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. பிரபாகர் மற்றும் 2 பேர் மீது இந்தப் புகார்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், அபேஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இந்தப் புகாரை கொடுத்துள்ளனர். பிரபாகரிடம் விசாரணை நடத்தும்அளவுக்கு புகாரில் சான்றுகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications