என்-கி-றார் -"தி-ரு"
கப்பல் கடத்தல்காரர்களுடன் சமரசப் பேச்சு துவங்கியது
பூஜ் (குஜராத்):
குஜராத் அருகே அரபிக் கடலில் ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட இத்தாலி கப்பலின்,கடத்தல்காரர்களுக்கும், ஐ.நா. சபை மனித உரிமை ஆணைய பிரதிநிதிகளுக்கும்இடையே சமரசப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
கப்பலைக் கடத்தியது ஸ்டவவேஸ் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. கடத்தல்காரர்களில், 10 ஈரானியர்களும், 4 ஈராக்கியர்களும் உள்ளனர்.இவர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் அரசியல் புகலிடம்கோரியுள்ளனர். தங்களை மேற்கு ஆசிய நாடுகளுக்கு நாடு கடத்தக் கூடாது என்றும்கோரிக்கை வைத்துள்ளனர்.
தங்களிடம் வெடிபொருள் ஏதும் இல்லை என்றும் வெறும் ஆயுதங்கள் மட்டுமேஇருப்பதாகவும் கடத்தல்காரர்கள் கூறியுள்ளனர். கடத்தப்பட்ட இத்தாலிய கப்பல்நிறுவனத்தின் ஏஜென்டான பி அன்ட் ஐ கிளப் நிர்வாகிகளும் சமரசப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, குஜராத் கடலோரப் பகுதியில், அரபிக் கடலில் இந்திய கடற்படைபாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. விக்ரஹா, வீரா ஆகிய இரு கடலோரக் காவல்படைபடகுகள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மும்பையிலிருந்து கடற்படைவிமானமும் கண்ட்லாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
6000 மெட்ரிக் டன் எடையுள்ள எம்.வி. மெட்ஸ்டார் என்ற இந்தக் கப்பல்,இத்தாலியின் அல்கோவ் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இத்தாலியின்செயின்ட் வின்சென்ட் நகரில் பதிவு செய்யப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 பேர்உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குரோஷியர்கள், பிலிப்பைன்ஸ்நாட்டவர். கப்பல் கேப்டன் உக்ரைனைச் சேர்ந்தவர்.
ஜூன் 8-ம் தேதி ஈரானிலுள்ள பந்தர் இ அப்பாஸ் என்ற துறைமுகத்திலிருந்துகிளம்பியது. 2000 டன் கிரானைட் மற்றும் மார்பிள் கற்களைக் கொண்டு வந்த இந்தக்கப்பல், ஞாயிற்றுக்கிழமை கண்ட்லா துறைமுகத்திற்கு வருவதாக இருந்தது. ஆனால்கப்பல் கிளம்பிய அடுத்த நாளே கடத்தப்பட்டு விட்டது.
கடத்தல்காரர்கள், முதலில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டினர். மேலும்கண்ட்லாவில் கப்பலை நிறுத்தவும் அனுமதிக்கவில்லை. தற்போது வெடிபொருள்ஏதும்இல்லை என்ற அவர்கள் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications