தமிழகத்தில் இன்று
தொலைத் தொடர்புத் துறையில் நு-ழை-கி-ற-து பவர் கிரிட் நிறுவனம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மும்பை
மத்திய அரசின் மின்துறை நிறுவனமான பவர் கிரீட் கார்பரேஷன், ரூ. 5000 கோடி முதலீட்டுடன் தொலைத் தொடர்புத் துறையில் கால் பதிக்கிறது.
நாடு முழுவதிலும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 50,000 கிலோமீட்டர் தொலைவிற்கு அதி நவீன தொலைத் தொடர்பு ஆப்டிகல் பைபர் கேபிள்களைப்பதிக்கும் பணிக்காக ரூ. 5000 கோடி முதலீட்டைச் செய்ய இந்திய பவர் கிரிட் கார்பரேஷன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 14,000 கிலோமீட்டர் அளவுக்கு ஆப்டிகல் பைபர்களைப் பதிப்பிப்பதற்காக ரூ. 1000 கோடி முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளதாகநிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நல்ல நிதிப் பின்னணியுடன் கூடிய, தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக இப் பணியைமேற்கொள்ள எங்களது நிறுவனம் தயாராக உள்ளது.
துவக்கத்தில் ரூ. 1000 கோடி முதலீடு செய்யப்படும். கூட்டு நிறுவனம் கிடைத்தவுடன் ரூ. 4000 கோடி முதலீடு செய்யப்படும். எங்களுடன் கூட்டாக சேர்ந்துஈடுபட என்ரான், தேசிய கிரிட் கம்பெனி, பி.எஸ்.இ.எஸ்., ரிலையன்ஸ், பி.பி.எல், சிங்கப்பூர் டெலிகாம், எல் அன்ட் டி, டாடா மற்றும்வி.எஸ்.என்.எல்.ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
விரைவில் இவர்களில் ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு மாதத்தில் இப்பணி முடியும். அதன் பிறகு திட்ட வரைவு கோரப்படும். ஆறுமாதங்களுக்குள் இப்பணி முடிவடையும்.
துவக்கத்தில், டெல்லி, சண்டீகர், சிம்லா, ஜெய்ப்பூர், ஜலந்தர் மற்றும் பிற வட மாநில நகரங்களுக்கிடையே, தொலைத் தொடர்பு இணைப்பை ஏற்படுத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.
2003-ம் ஆண்டுக்குள், 7000 கிலோமீட்டர் வரை தொலைத் தொடர்பு ஆப்டிகல் பைபர் கேபிள்கள் பதிக்கும் பணி முடிவடையும். 23 நகரங்களைஇணைக்கும் விதமாக இது இருக்கும். 2005-ம் ஆண்டு இறுதிக்குள் 56 நகரங்களில் தொலைத் தொடர்பு இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.
பவர் கிரீட் நிறுவனம் மூலம் ஏற்கனவே 2000 கிலோமீட்டர் அளவுக்கு ஆப்டிக் பைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன.
தகவல் பரிமாற்றத்திற்கு இந்த தொலைத் தொடர்பு வலையமைப்பு உதவிகரமாக இருக்கும். இதுதொடர்பாக மத்திய உள்துறை, பாதுகாப்புத் துறைஅதிகாரிகளுடன் பேச்சு நடந்து வருகிறது என்றார்.
பவர் கிரீட் நிறுவனத்தின் புதிய திட்டம் குறித்து மத்திய மின்துறை அமைச்சர் ஜெயவந்திபென் மேத்தா கூறுகையில், மின்துறை மற்றும் தொலைத் தொடர்புத்துறை இரண்டும் இணைந்து செயல்படுவதன் மூலம் நாட்டுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பதால் இத்துறையில் பவர் கிரீட் நிறுவனம்ஈடுபடுகிறது.
விரிவான மின் வலையமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை சேருவதன் மூலம் சிறந்த தொலைத் தொடர்பு வசதியை நாட்டில் ஏற்படுத்த முடியும். இதன்மூலம் பெருநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் அதிநவீன தொலைத் தொடர்பு வசதியை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications