தமிழகத்தில் இன்று
பிரச்-ச-னை-களை-யும் மீறி உல-கின் "மெ-கா" பணக்காரராய் தொட-ரும் பில் கேட்ஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நியூயார்க்:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் தொடர்ந்து உலகிலேயே பெரும் பணக்காரராகத் திகழ்கிறார்.
நியூயார்க் நகரின் போர்ப்ஸ் வருடாந்திரப் புத்தகத்தில் இது கூறப்பட்டுள்ளது. உலகிலுள்ள 200 பணக்காரர்களின் பட்டியலை இந்தப் புத்தகம் வெளியிட்டுள்ளது.
ஆரக்கிள் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் லேரி எல்லிசன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில்ஒருவரான பால் ஆலன் மூன்றாவது பெரும் பணக்காரராக உள்ளார்.
கடந்த 12 மாதங்களில் பங்குகள் விலைச் சரிவால் பில் கேட்ஸுக்கு 40 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. இருந்தும் அவர் தொடர்ந்து முதலிடத்தில்உள்ளார்.
1999-ல் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக இருந்தது. அதன் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குத் தொகை 45 சதவீதம்குறைந்தது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பிரிப்பது தொடர்பாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், நிறுவனம் பிரிக்கப்படுமாஎன்பதில் நிலவிய குழப்பங்கள் காரணமாக பங்கு மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
தற்போது பில் கேட்ஸுக்கு 60 பில்லியன் டாலர் சொத்து மட்டுமே உள்ளது.
ஆரக்கிள் நிறுவனம் கடந்த ஆண்டு 500 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. எல்லிசனின் சொத்து மதிப்பு 47 மில்லியன் டாலராக உள்ளது.
200 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1.1 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.
முதல் பத்து இடத்தில் உள்ள பணக்காரர்கள் வருமாறு:
1.பில் கேட்ஸ், மைக்ரோ சாப்ட் (60 பில்லியன் டாலர்).
2.லேரி எல்லிசன், ஆரக்கிள் (47 பில்லியன் டாலர்).
3.பால் ஆலன், மைக்ரோசாப்ட்.
4.வாரன் பப்பட், பெர்க்ஷைர் ஹதாவே (28 பில்லியன் டாலர்).
5.தியோ, கார்ல் ஆல்பிரட் (20 பில்லியன் டாலர்).
6.செளதி இளவரசர் அல்வலீத் பின் டலால் அல்சாத் (20 பில்லியன் டாலர்).
7.ராப்சன் வால்டன் (20 பில்லியன் டாலர்).
8.மசயோஸி சான் (19.4 பில்லியன் டாலர்).
9.மைக்கேல் டல் (17.8 பில்லியன் டாலர்).
10.கென்னத் தாம்சன் (16.1 பில்லியன் டாலர்).
பிரேம்ஜிக்கு இடமில்லை:
இந்தியாவின் விப்ரோ நிறுவனத் தலைவர் ஆசிம் பிரேம்ஜி பணக்காரர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இல்லை. பிப்ரவரி 18-ம் தேதி அவரது சொத்துமதிப்பு 35 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் இப்போது வெறும் 6.9 பில்லியன் டாலர் மட்டுமே அவரது சொத்து மதிப்பு.
ஜூலை 3-ம் தேதி வெளியிடப்பட்ட போர்ப்ஸ் புத்தகத்தில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications