புதுவையில் 11-ம் வகுப்புக்கு புதிய முறையில் மாணவர்கள் தேர்வு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 11-ம் வகுப்புக்கு புதிய முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப் புதியதிட்டம் புதுவையில் முதன்முறையாக விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து புதுவை கல்வி அமைச்சர் என். ரெங்கசாமி கூறியதாவது:
புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கு புதிய அதே சமயம் பொதுவான முறையில் மாணவர்கள்தேர்வு செய்யப்படவுள்ளனர். முதன்முறையாக இத் திட்டம் புதுவையில் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம், மாணவர்கள் தாங்கள் 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், எந்த பள்ளியில்சேரலாம், எந்த பாடப்பிரிவு தேர்ந்தெடுக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யமுடியும். அதற்கேற்ப அவர்கள்விண்ணப்பிக்கவும் முழு உரிமையும் அளிக்கப்படும்.
இப் புதிய திட்டத்தின் கீழ் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள 36 பள்ளிகளுக்கு பரிசோதனைமுறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார் ரெங்கசாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications