கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
"பாத்திமாவின் மூன்றாவது ரகசியம்": விரை-வில் வெளியிட வாடிகன் முடிவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வாடிகன் சிட்டி:
போப் ஜான் பாலைக் கொல்ல முயற்சி நடக்கும் என்று கணிக்கப்பட்ட தகவல் அடங்கிய "பாத்திமாவின் மூன்றாவது ரகசியத்தை பகிரங்கப்படுத்தகத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாட்டிகன் சிட்டி முடிவு செய்துள்ளது.
ஜூன் 26-ம் தேதி இந்த ரகசியம் வெளியிடப்படவுள்ளது. இந்த ரகசியத்தில், போப் ஜான் பாலைக் கொல்ல முயற்சி நடக்கும் என்பது உள்ளிட்ட பலகணிப்புகள் இடம் பெற்றுள்ளன. போர்ச்சுக்கீசிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த ரகசியம் குறித்து மூத்த கார்டினால் ஜோசப் ரட்ஸிங்கர் விளக்கம்கொடுத்துள்ளார். ஜூன் 26-ம் தேதி இந்த ரகசியம் வெளியிடப்படுகிறது.
1981-ம் ஆண்டு மே 13-ம் தேதி போப் ஜான்பாலைக் கொல்ல முயற்சி நடக்கும், 20-வது நூற்றாண்டின் இறுதியில் கம்யூனிசம் அழியும் என்பதுபோன்ற கணிப்புகள் இந்த ரகசியத்தில் இடம்பெற்றுள்ளன. கணிப்பில் கூறியிருந்தபடியே, போர்ச்சுக்கீசிய நகரான பாத்திமாவில் போப் ஜான்பாலைக்கொல்ல முயற்சி நடந்தது.
இதையடுத்து இந்த கணிப்பு குறித்து உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதை வைத்து பல ஊகங்கள் கிளம்பின. உலகம் அழியப் போவது குறித்தும்இதில் உள்ளதாகவும் வதந்திகள் கிளம்பின.
பாத்திமா ரகசியத்தின் பின்னணி:
போர்ச்சுகல் நாட்டின் பாத்திமா நகரைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ லூசியா டாஸ் சான்டோஸ். அவருக்கு இப்போது 93 வயதாகிறது. லூசியா மற்றும் இருகன்னியாஸ்திரீகளுக்கு 1917-ம் ஆண்டு பாத்திமா நகரில், கன்னி மேரி காட்சி கொடுத்தார். அப்போது அவர்களுக்கு கன்னி மேரி சில தகவல்களைச்சொன்னார்.
தான் பெற்ற தகவல்களை தனக்குள் வைத்துக் கொண்ட லூசியா, 1940-ல் கன்னி மேரி மூலம் தான் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சிலவற்றைக்கணித்து வாட்டிகன் சிட்டிக்கு போர்ச்சுக்கீசிய மொழியில் எழுதினார். ஆனால் அவற்றை வெளியிடாமல் அடுத்தடுத்து வந்த போப்பாண்டவர்கள்ரகசியமாக வைத்திருந்தனர்.
இந்தக் கணிப்புகள் குறித்து உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களிடையே பரபரப்பும், ஆவலும் ஏற்பட்டது. இதை அடிப்படையாக வைத்து பலபுத்தகங்கள் எழுதப்பட்டன. உலகின் அழிவு குறித்து இந்தக் கணிப்புகளில் கூறப்படடிருந்ததாகவும் ஊகம் கிளம்பியது. ஒரு விமானக் கடத்தல் குறித்தும் கூடபாத்திமா ரகசியத்தில் கூறப்பட்டுள்ளாகவும் கூறப்பட்டது.
தொடர்ந்து இதுமாதிரியான கணிப்புகள் வந்ததால், குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இவற்றை வெளியிட வாட்டிகன் சிட்டி முடிவு செய்தது.லூசியா எழுதியவற்றின் நகலை ஜூன் 26-ம் தேதி வாட்டிகன் சிட்டியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. போர்ச்சுக்கீசியமொழியில் உள்ள இந்தக்கணிப்புகளுக்கான விளக்கத்தை கார்டினால் ஜோசப் கொடுத்துள்ளார்.
20-ம் நூற்றாண்டின் நிகழ்வுகள், கிறிஸ்தவத்திற்கு எதிரான போராட்டங்கள், கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும் இதில்கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த போப்பாண்டவர்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.
கணிப்பில் கூறியிருந்தபடியே, 1981-ம் ஆண்டு மே 13-ம் தேதி பாத்திமா நகரில் வைத்து போப் ஜான்பாலைக் கொல்ல முயற்சி நடந்தது. துருக்கியைச்சேர்ந்த மெஹ்மத் அலி அக்கா என்பவர் போப்பை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த போப்பாண்டவர் பின்னர் உயிர்பிழைத்தார்.
தற்போது வெளியிடப்படவுள்ள ரகசியத்திற்கு பாத்திமாவின் மூன்றாவது ரகசியம் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளியானரகசியங்களில் இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டது குறித்த கணிப்பு கூறப்பட்டிருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications