தமிழகத்தில் இன்று
கே: கோஷ்டிகள் இல்லாத காங்கிரஸை தமிழகத்தில் உருவாக்கப்போவதாகஇளங்கோவன் கூறுகிறாரே, முடியுமா?
ப: நூல் இழைகள் இல்லாத பருத்தி ஆடை உருவாகிற போது இதுவும் நடக்கலாம்.
கே: ஒரே வீட்டில் 367 ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பற்றி...?
ப: இது ஒரு பெரிய விஷயமா? ஒரேமனிதனிடம் 367 ஒட்டு கூட இருக்குமே!
கே: கடவுளை நான் நம்பவில்லை: ஆனால் ஜெயலலிதாவை நம்புகிறேன் என்று கி.வீரமணி கூறியிருக்கிறாரே?
ப: பின் என்னவாம்? கடவுளை நம்பினால் என்ன கிடைக்கும்? விபூதி பிரசாதம்கிடைக்கும். மிஞ்சி மிஞசிப் போனால் சர்க்கரைப் பொங்கல் கிடைக்கலாம்.ஜெயலலிதாவை நம்பினால் அப்படியா?
கே: சமாளிப்பது, பூசி மெழுகுவது - இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்என்ன?
ப: இலங்கைப் பிரச்சனை தனது பேச்சுக்கு தமிழக முதல்வர் அளித்த விளக்கம் -சமாளிப்பது: அந்த பேச்சினால் ஒரு இடைஞ்சலும் இல்லாதது மாதிரி மத்திய அரசு அளித்தவிளக்கம் - பூசி மெழுகுவது.
கே: கடுமையான நிதி நெருக்கடியுள்ள இந்த நேரத்தில் தொலைத் தொடர்புஊழியர்களுக்கு இலவசத் தொலைபேசி திட்டம் அவசியம்தானா?
ப: ராம் விலாஸ் பாஸ்வான் மிரட்டலுக்கு பிரதமர் பணிந்திருக்கிறார். இப்படி ஒவ்வொருஇலாகாவும், அதன் ஊழியர்களுக்கு தங்களுடைய பொருட்கள் அல்லது சேவைகளைஇனாமாகத் தருவதுதான் நியாயம் என்றால் - அது எங்கே போய் முடியும்?
பிரதமர் பணிந்தார் என்பதை மறைப்பதற்காக, ஊழியர்களோடு ஒப்பந்தம் ஏற்பட்டதுமாதிரியும் போக்கு காட்டினார்கள். அதுவும் பல்லிளித்து விட்டது. மான்யங்களும்,இனாம்களும் எல்லா துறையிலும் குறைய வேண்டும் - தகவல் தொடர்புத் துறையைத்தவிர என்பது மத்திய அரசின் கொள்கையா?
இப்படி பணிந்தால் இதுவே வழக்கமாகி விடாதா? பிரதமர் சறுக்கியிருக்கிறார். கூட்டணிதத்துவம் தனது கை வரிசையயைக் காட்டத் தொடங்கியிருக்கிறது.
கே; தமிழ் நாட்டில், காங்கிரஸ் இழந்த பெருமையை மீட்கப் போவதாக புதியதலைவர் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் கூறியிருப்பது பற்றி...?
ப: அடமானம் வைக்கப்பட்ட பொருளாக இருந்தால் மீட்டுக் கொள்ளலாம். காங்கிரஸின்பெருமை, விற்கப்பட்ட பொருளாயிற்றே ? எப்படி மீட்பது?
71-ல் தி.மு.க. விடம் இந்திரா காந்தி, காங்கிரஸின் பெருமையை விற்று விட்டாரே!அதற்குப் பிறகு அது இரு கழகங்களிடையே கை மாறிக் கொண்டிருந்தது. இப்போதுஅ.இ.அ.தி.மு.க, விடம் இருக்கிறது. மீண்டும் வாங்குவது என்றால், ரொம்பவும் முனையவேண்டியிருக்கும்.
கே: ராஜேஷ் பைலட் மறைவு குறித்து ...?
ப:ஒரு வித்தியாசமான அரசியல்வாதி மறைந்து விட்டார். போலித்தனம் இல்லாதவர்.காங்கிரஸில் உயர்ந்திருக்கக் கூடியவர். அவருடைய குடும்பத்தாருக்கு துக்ளக் தனதுஅனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
கே: உலக அளவில் தமிழர்களுக்கு முகவரி கொடுத்து தம்பி பிரபாகரன்தான் என்றுடாக்டர் ராம்தாஸ் கூறியுள்ளாரே?
ப: அகரம் என்ற இடத்திற்கு தமிழகம் முழுவதும் முகவரி கொடுத்து, அகரம்நாராயணன்தான்: சந்தனக் காடுகளுக்கு முகவரி கொடுத்து வீரப்பன்தான்: ஃபிஜிக்கு உலகஅரங்கில் முகவரி கொடுத்து ஸ்பெயிட்தான்... என்றெல்லாம் கூட சொல்லிபெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
கே: நாம் திராவிடர்கள். திராவிடன் என்பதை மறந்துவிட்டால், நாம் 5000ஆண்டுகளுக்குப் பின்னால் தள்ளப் பட்டு விடுவோம் என்று ராமதாஸ் கூறியுள்ளதுபற்றி...?
ப: 5000 வருடங்களுக்கு முன்பு இங்கு திராவிடர்கள் இல்லை: அதனால் திராவிடர்கள்பழங்குடி மக்கள் அல்ல: பழங்குடி மக்கள் வேறு யாரோ: திராவிடர்கள் பிறகு வந்தார்கள் ...என்று கூறுகிற மாதிரி ஆகிறதே - டாக்டர் ராமதாஸின் பேச்சு! வீரமணிக்கு கோபம் வருமே!
கே; கிரிக்கெட் ஊழலில் ஈடுபட்ட இந்திய வீரர்கள், தாங்களாகவே முன் வந்துஉண்மைகளை ஒப்புக் கொண்டால், அவர்களுக்கு கருணை காட்டப்படும் என்றவிளையாட்டுத்துறை அமைச்சரின் எச்சரிக்கை பற்றி...?
ப: சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். விசாரணையின் மூலம் உண்மைகளை அறியமுடியுமே தவிர, நிரூபிக்க முடியாது: அதற்கு வேண்டிய சாட்சியங்கள் கிட்டாது: வழக்குகிழக்கு என்று வந்தால் தோற்றுவிடும்.: அதனால் ஆட்டக்காரர்களே உண்மையை ஒப்புக்கொண்டு விட்டால், எங்களுக்கு வசதியாக இருக்கும் என்பதை சுருக்கி, ஒரே வரியில்சொல்லி விட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications