தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

முடிவுக்கு வந்தது கப்பல் கடத்தல் விவகாரம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மும்பை:

15 நாட்களுக்கு முன்பு ஈரானிலிருந்து கப்பலைக் கடத்தி, குஜராத்தின் கண்ட்லா துறைமுகம் அருகே நிலை கொண்டிருந்த கடத்தல்காரர்களுடன் நடந்தபேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. கடத்தல்காரர்கள் அவரவர் நாட்டுக்குத் திரும்பினர்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த எம்.வி.மெட்ஸ்டார் என்ற அந்தக் கப்பல், ஈரான் துறைமுகத்திலிருந்து கிளம்பியவுடன் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட கப்பல்,கண்ட்லா துறைமுகம் அருகே நிலை கொண்டிருந்தது. கப்பலை, ஈரான் மற்றும் ஈராக் நாடுகளைச் சேர்ந்த 14 பேர் கடத்தி வந்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் தங்களுக்கு அடைக்கலம் தர வேண்டும் என்று அவர்கள் கோரினர். இக்கோரிக்கையை ஐரோப்பிய நாடுகள்நிராகரித்து விட்டன.

இந்த நிலையில் கப்பல் மும்பை துறைமுகம் கொண்டு வரப்பட்டது. ஐ.நா. மனித உரிமை ஆணையம் மற்றும் கப்பல் நிறுவனப் பிரதிநிதிகள்கடத்தல்காரர்களுடன் பேச்சு நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து கடத்தல்காரர்கள் யார் என்று முதலில் அடையாளம்கண்டுபிடிக்கப்பட்டது. 14 பேரில் 9 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள். 5 பேர் ஈராக்கைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் தற்போது அவரவர் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டனர். ஈரானைச் சேர்ந்தவர்கள், மும்பை விமான நிலையத்திலிருந்துஈரான் ஏர்லைன்ஸ் விமானத்தில் டெஹரான் புறப்பட்டுச் சென்றனர். ஈராக்கைச் சேர்ந்தவர்கள் தாங்கள் கடத்தி வந்த கப்பலிலேயே பாக்தாத்புறப்பட்டுச் சென்றனர். அக்கப்பலில் 20 பேர் உள்ளனர்.

கடத்தல்காரர்கள் மீது அவர்களது நாட்டுச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+