அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
சென்னையில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கிறது மலேசியா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> சென்னை:
சென்னையில் ரூ.580 கோடி செலவில் மலேசியத் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்படும் உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டம் குறித்து மலேசியகுழுவினர் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:
சென்னை மாநகரில் தற்பொழுது நிலவும் போக்குவரத்து நெரிசலைப் பெரிதும் குறைக்கும் வகையில் பல்வேறு மேம்பாலங்களை தமிழக அரசு அமைத்துவருகிறது. இனி வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட, சென்னைத் துறைமுகத்திலிருந்து 34 கிலோ மீட்டர்நீளமுள்ள தாம்பரம் வரையிலான உயர்மட்ட விரைவுச் சாலை (எலிவேட்டட் எக்ஸ்பிரஸ் ஐவே) ஒன்றை அமைத்திட தமிழக அரசு எண்ணியுள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்றிடும் வகையில் மலேசிய அரசுடன் தொடர்பு கொண்டு அதற்கான ஒரு விரிவான திட்ட ஆய்வறிக்கையை தயாரித்து வழங்குமாறுதமிழக அரசு கேட்டுக் கொண்டது.
ரூ.580 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் அமைத்திட மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் திட்டம் ஒன்றுதயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சென்னை துறைமுகம் தொடங்கி கோயம்பேடு வரையிலான 11.5 கிலோமீட்டர் தூரம் முதல் கட்டமாகவும்,கோயம்பேடு -மதுரவாயல் வரையிலான 3 கிலோ மீட்டர் தூரம் இரண்டாம் கட்டமாகவும், பின்னர் மதுரவாயல் - தாம்பரம் வரையிலான19.5 கிலோ மீட்டர் மூன்றாம் கட்டமாகவும் நிறைவேற்றப்படும்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள குளச்சல் துறைமுகத்தை ஏறத்தாழ 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆண்டுகளில்சர்வதேசத்தரம் வாய்ந்த துறைமுகமாக மேம்படுத்துவதற்கான திட்ட ஆய்வறிக்கையையும் மலேசிய அரசு தயாரித்துள்ளது.
இந்த இரண்டு ஆயவறிக்கைகளையும் முதல்வர் கருணாநிதியிடம் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு செவ்வாய் கிழமை வழங்கினார். மேலும் 4கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இவ்விரு திட்டங்களின் செயலாக்கம் குறித்த சி.டி-ராம் மூலம் முதல்வருக்கு விளக்கிக் காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியின்போது தமிழக அரசின் சார்பில் பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா.கிருஷ்ணன், தலைமைச் செயலாளர்முத்துசாமி, இந்தியாவிற்கான மலேசியத் தூதர் சியூகோய், மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் டத்தோஅப்துல் ரகுமான், டத் தா சுவா சூன் போக், அஸ்ரி ஆகியோர் இருந்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications