தமிழகத்தில் இன்று
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.180 கோடி - தமிழக அரசு ஒதுக்கீடு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த 180.95 கோடி ரூபாயை ஒதுக்கீடுசெய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2000-2001-ம் ஆண்டுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொருதொகுதிக்கும் ரூ.77 லட்சம் வீதம் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
அதன்படி இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு தொகுதிக்கும் 77 லட்சம் என்ற அடிப்படையில் ரூ.180.95கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.
மேலும், இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும், அரசு அனுமதித்துள்ள ரூ.77 லட்சத்தில் முதல் தவணையாக 50 சதவீதம்,அதாவது ரூ.38.5 லட்சம் விடுவிக்கப்படும். விடுவிக்கப்பட்ட தொகையில் 60 சதவீதம் செலவிடப்பட்டதற்கானசெலவுப் பட்டியலை சரிபார்த்த பின்பு மீதி 50 சதவீதம் அதாவது ரூ.38.5 லட்ச ரூபாய் விடுவிக்கப்படும்.
கணினி பாடத் திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தொகுதியிலும், உயர் நிலை மற்றும்மேல் நிலைப் பள்ளிகளில் இதற்கான வசதிகளுக்காக மூன்று கணினி மையக் கட்டடங்கள் கட்டுவதற்காக ரூ.12லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அவரது தொகுதியில் மீதியுள்ள நிதி ரூ.65 லட்சத்தில் மேற்கொள்ள வேண்டியபணிகளை, வழிகாட்டி நெறிறைகளுக்கு உட்பட்டு, தம் விருப்பப்படி பரிந்துரைக்கலாம்.
தமிழ்நாட்டில் 2000-2001-ல் ஜவகர் கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகளிலும்அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக ரூ.96.46 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications