For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கே: சாதாரண மக்களின் அரிசி விலையைக் குறைக்காத அரசு, வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழக்கிற்கு மட்டும் சுமார் 100 கோடி செலவழித்துள்ளது.இத்தொகையை முதல்வரும், சட்ட அமைச்சரும் அரசு கஜானாவில் செலுத்தவேண்டும் என்று பி.எச்.பாண்டியன் கூறியுள்ளாரே?

ப: இதே வாதத்தின் அடிப்படையில் பார்த்தால், இதுவரை கண்டுபிடிக்கப்படாத பல திருட்டு வழக்குகளை விசாரிக்க, தொடர்ந்து வந்த அரசுகள் செய்தசெலவுகளை, அந்தந்தக் கால முதல்வர்கள், கஜானாவில் செலுத்த வேண்டியிருக்குமே!

கே: கருனாநிதியின் திராவிடக் கொள்கை: ஜெயலலிதாவின் திராவிடக் கொள்கை : கி.வீரமணியின் திராவிடக் கொள்கை - வித்தியாசம் என்ன?

ப: மத்தியில் வேண்டாத அரசு வரும்போது ஹிந்தி எதிர்ப்பு -கருணாநிதியின் திராவிடக் கொள்கை:பெரியார் சொன்னவற்றை நீக்கியது - ஜெயலலிதாவின்திராவிடக் கொள்கை : ஜெயலலிதா நீங்கலாக பிராமண எதிர்ப்பு - வீரமணியின் திராவிடக் கொள்கை.

கே: கம்யூனிசம் என்கிறார்களே விளக்கம் தர முடியுமா?

ப: என்னிடம் கேட்டு என்ன பயன்? நான் புதைபொருள் ஆராய்ச்சியாளன் அல்லவே!

கே: பி.ஜே.பி. அரசு நம் அரசு என்று நினைந்திருந்த எண்ணம் போய் ரொம்ப நாளாகி விட்டது என்கிறாரே பால் தாக்கரே?

ப: பா.ஜ.க. அரசுக்கு சமீபத்தில் கிடைத்திருக்கிற பெரிய நற்சான்றிதழ் இதுதான்.

கே: நீங்களும் பிறந்த நாள் விழா கொண்டாட மாட்டேன் என்கிறீர்கள். பிறருடைய பிறந்த நாள் விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன்என்கிறீர்களே, அது ஏன்?

ப: சாவை ஒரு வருடம் நெருங்கிச் செல்வது - ஒரு சாதனை அல்ல.

கே: அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தால்...?

ப: அஜீரணத்துக்குக் கூட அமெரிக்காவுக்குப் போய் சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது.

கே: முதன்முதலில் எனக்கு சூதாட்ட ஏஜென்டை 1996-ல் அறிமுகப்படுத்தியது அஸாருதீன்தான் என்று கூறி, தனது குற்றங்கள் பலவற்றையும் விசாரணைகமிஷன் முன்பாக தென் ஆப்பிரிக்காவின் ஹான்சி குரோனியே ஒப்புக் கொண்டுள்ளது பற்றி...?

ப: குரோனியே கூறியிருக்கிற தகவல் மேலும் விசாரணைக்குரியது. ஆனால் அவர் கூறிவிட்டதால் மட்டுமே அது உண்மை என்று ஆகிவிடாது.

அவரே, மாற்றி மாற்றி முன்னுக்குப் பின் முரணாகத்தான் பேசி வந்திருக்கிறார். தவிர, குரோனியே கூறியது உண்மைதான் என்றாலும் கூட அதிலிருந்தே,அஸாருதீன் குற்றம் செய்தவர் என்று நிரூபணம் ஆகிவிடாது .

சூதாட்ட ஏஜென்டை அஸாருதீனுக்கு நன்றாகத் தெரியும் என்று மட்டுமே நிரூபணம் ஆகும். அதற்கு மேல் என்ன நடக்கும் என்பதும் தெரிய வேண்டுமே?ஆகையால், இது விசரணைக்குரிய விஷயமே தவிர,குற்றத்தை நிரூபிக்கிற ஆதாரம் அல்ல.

இக் காரணங்களினால், அஸாருதீன் இந்திய அணியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது - ஏற்க முடியாதது. குற்றம் நிரூபணம்ஆனால் தான் இம்மாதிரி நடவடிக்கைகளுக்கு நியாயம் இருகும்.

அமைச்சர், ஆர்வக் கோளாறினால் அவசரப்பட்டு பேசியிருக்கிறார். அதே சமயத்தில், இந்த விவகாரத்தை மத விரோதமாகச் சித்தரிக்க அஸாருதீன்முற்பட்டிருப்பது, சின்னத்சதனம்.

கே: உங்களை சிலர் குறும்புக்காரர் என்றும்: சிலர் குழப்பவாதி என்றும்: சிலர் ஆணாதிக்கக்காரர் என்றும் கூறுகிறார்களே! நல்லதாக எதுவும்கூறுவதில்லையே ஏன்?

ப: ஏன்?இவை எல்லாமே பாராட்டுகளாகத்தானே இருக்கின்றன! நல்லத்ைதான் சொல்கிறார்கள்!

கே: ஜெயலலிதாவுக்கு அவருடைய பலம் தெரியாது. எனவேதான் நாளிதழ்களில் ஒரு பக்க விளம்பரம் கொடுத்து, அவருடைய பலத்தை உணர்த்துகிறோம்என்று காளிமுத்து விளக்கம் கூறியுள்ளது பற்றி...?

ப: அப்படியும் கூட புரியவில்லை போலிருக்கிறது. மீண்டும் மீண்டும் முழுப்பக்க விளம்பரம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்களே! சீக்கிரம் புரிந்துவிட்டால் நல்லது. விளம்பரக் கூத்தை தாங்க முடியவில்லை.

கே; தமிழ் ஈழம் உருவானால் இலங்கையில் என்ன மாறுதல் வரும்?

ப; கிழக்குப் பகுதி சேராது: அதனால் ஈழம் , ஊனமுற்ற ஈழமாக இருக்கும்! கொழும்பு, மலையகப்பகுதிகள் ஆகியவற்றில் வாழ்கிற தமிழர்கள்,அந்த ஈழத்திற்குப் போய்ச் சேர வண்டும் - என்று சிங்களர்கள் குரல் எழும்பும்.

இதனால் தகராறு வரும். அதை மேலும் கிளற, புலிகள் குண்டுகளை வைப்பார்கள். தமிழகத்திலும், பிரிவினைவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி நடக்கும்.குறையே இருக்காது.

கே: பிற மாநிலங்களைப் போல, தமிழக சட்டசபையில் அடிதடி நடக்கவில்லை - என்று சபாநாயகர் பழனிவேல் ராஜன் பெருமையாகக் கூறியிருப்பதுபற்றி...?

ப: இதில் சபாநாயகர் பெருமைப்பட்டுக் கொள்ள ஏதுமில்லை. பெரிய எதிரக் கட்சியாக இருப்பது த.மா.கா.

என்பதால்தான் அடிதடி இல்லை. த.மா.கா. அளவுக்கு அ.தி.மு.க. சட்டசபையில் பலம் பெற்றிருந்தால் - தெரிந்திருக்கும் சேதி!

ஒரு கழகம் ஆளும் கட்சி, மற்றொரு கழகம் பலமான எதிர்க் கட்சி - என்ற நிலை இருந்தால், அப்போது சபாநாயகரால் இப்படிப் பெருமைப்பட்டுகுகொள்ள முடியாது!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X