தமிழகத்தில் இன்று
பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மேலும் 22 இடங்களில் எண்ணெய் வளம்இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமி தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்படத்தைத் தடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். இவர்களுக்குத் தண்டனை வழங்கவும், அரசு சட்டம் இயற்றியுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களில் நாப்தா சால்வன்ட் ஆகிய பொருட்களை அரசு அனுமதியின்றி வைத்திருக்கக் கூடாது. வியாபாரிகள் இத்தகைய பொருட்களைவைத்திருக்க அனுமதி பெற ஆகஸ்ட் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மத்தியில் தேவகவுடா அரசு இருந்தபோது கொண்டு வரப்பட்ட மானியக் குறைப்புத் திட்டத்தை தற்போது அரசு அமல்படுத்தி வருகிறது. இதன்படி வரும்2002-ம் ஆண்டுக்குள் பொட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் முற்றிலும் நீக்கப்படும்.
தற்போது அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.4.50-க்கு விற்கப்படுகிறது. இதற்கு அரசு ரூ. 6.50 மானியம்வழங்கி வருகிறது. காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.132 மானியம் வழங்கப்படுகிறது. மானியத்தைக் குறைத்தால் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்கமுடியும்.
வாகனங்களில் காஸ் பயன்படுத்த விரைவில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
கொச்சியிலிருந்து கோவை வழியாக கரூருக்கு 292 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெட்ரோலியம் பைப்லைன் பதிக்கும் திட்டம் இந்த ஆண்டு டிசம்பர்மாதத்துக்குள் நிறைவேற்றப்படும். இதனால் போக்குவரத்து செலவு, சுற்றுச் சூழல் மாசுபடுதல் தடுக்கப்படும்.
தமிழகம் முழுவதிலும் 388 இடங்களில் காஸ், பெட்ரோல், மண்ணெண்ணெய் பங்குகளைத் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவை நான்கு மண்டலங்களாகப்பிரித்து தேர்வு செய்யப்படும்.
கிராமப் புறங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 10 ஆயிரம் மக்கள் வசிக்கும் பஞ்சாயத்துயூனியன்களுக்கு ஒரு காஸ் ஏஜென்சி ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுவரை காஸ் இணைப்புக் கேட்டு காத்திருந்த அனைவருக்கும் இணைப்புக் கொடுக்க கடிதம் அனுப்பப்பட்டு விட்டது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் முடிவுக்குப் பிறகு பெட்ரோலிய விலை மறு பரிசீலனை செய்யப்படும் என்றார் பொன்னுசாமி.
அமைச்சர் பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் சந்தானம் உடனிருந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications