தமிழகத்தில் இன்று
பிஜி இடைக்கால அரசில் இந்தியர்க-ளுக்கு இடம்
சுவா:
பிஜியில் விரைவில் ஏற்படுத்தப்படவுள்ள இடைக்கால அரசில் இந்தியர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஜியில் கடந்த மே 19-ம் தேதி புரட்சி ஏற்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தபிரதமர் மகேந்தி செளத்ரி தலைமையிலான ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிஜியைச்சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் புரட்சிப் படையினர் இந்த புரட்சியைநடத்தினர்.
தற்போது புரட்சிப் படையினரின் பிடியில் பிரதமர் உள்பட 27 பேர் பிணைக்கைதிகளாக உள்ளனர். இந் நிலையில், பிஜியின் ஆட்சி ராணுவத்திடம் வந்தது.
பிஜியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து அடுத்த 2 ஆண்டுகளுக்குத்தனது ஆட்சி தொடரும் என்று ராணுவம் அறிவித்தது. மேலும், ஒரு வாரத்துக்குள்ஜனநாயக முறையில் புதிய இடைக்கால அரசு ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.
அதன்படி ஜூலை 5-ம் தேதி புதிய இடைக்கால அரசு ஏற்படுத்தப்படும் என்றும், அதில்இந்தியர்கள் இடம் பெறக்கூடும் என்று கூறப்படுகிறது. முழுவதும் பிஜிநாட்டவர்களைக் கொண்ட இடைக்கால அரசு ஏற்படும் வரை பிணைக் கைதிகள் 27பேரையும் விடுவிக்கமாட்டோம் என்று புரட்சிப் படையினர் கூறியுள்ளனர்.
புரட்சிப் படையினரின் கோரிக்கைக்கு எதிராக புதிய இடைக்கால அரசில் இந்தியர்கள்இடம் பெறுவார்கள் என்ற ராணுவ அதிகாரிகள், எத்தனை இந்தியர்களுக்கு அரசில்இடமளிக்கப்படும் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
புதிதாக ஏற்படுத்தப்படும் அரசுக்கு ராணுவம் முழுப் பாதுகாப்பு கொடுக்கும். பிஜியில்விரைவில் பொதுத் தேர்தல் நடத்துவதற்குத் தயாராகும் வகையிலும், நாட்டில்ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலும் பிஜியில்இடைக்கால அரசை ஏற்படுத்த ராணுவம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்கானஇறுதிக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிஜியில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்ட பிறகு அனைத்தும் அந்த அரசிடம்ஒப்படைக்கப்படும். அதன் பிறகு, புரட்சிக்காரர்களால் நாடாளுமன்றத்துக்குள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள பிரதமர் மகேந்திர செளத்ரி உள்பட 27பேரையும் விடுதலை செய்வதற்கான பணிகளை ராணுவம் மேற்கொள்ளும் என்றார்ராணுவச் செய்தித் தொடர்பாளர் தராகினிகினி.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications