பள்ளிகளில் பாலியல் கல்வி.. நாடு முழுக்க விரைவில் அமல்.. மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய பள்ளிக் கல்வி முறையில் மிக பெரிய மாற்றமாக பாலியல் கல்வி தொடர்பாக மத்திய அரசு சில முக்கியமான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதாவது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விரிவான பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் குற்றங்கள் அதிகரித்தே வருகிறது. இது தொடர்பான புரியலை உண்டாக இந்தியாவில் குழந்தைகளிடையே பாலியல் கல்வி தேவை என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருக்கிறது.

Sex education India Supreme court

பாலியல் கல்வி

இருப்பினும், அடிப்படைவாத அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளன. இதனால் பாலியல் கல்வியை பள்ளி, கல்லூரிகளுக்கு எடுத்து செல்ல முடியாத நிலையே இத்தனை காலம் இருந்தது. இந்தச் சூழலில் தான் பாலியல் கல்வி தொடர்பாக மத்திய அரசு சில முக்கியமான தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதாவது வயது சார்ந்த விரிவான பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு இந்த பாடத்திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இது தொடர்பான வழக்கை விசாரித்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி இந்த தகவலை தெரிவித்தார். நிபுணர் குழுவின் அறிக்கையை அரசு ஏற்று கொண்டுள்ளதாகவும், அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பின்னணி

சிறார்களிடையே அதிகரித்து வரும் கர்ப்பம் மற்றும் இளம் வயதினரிடையே பரஸ்பர சம்மதத்துடன் ஏற்படும் உறவுகள் தொடர்பான விவகாரங்களில் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு உச்சநீதிமன்றம் முன்பு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

26 உறுப்பினர்களை கொண்ட இந்த நிபுணர் குழுவில்.. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், டாடா சமூக அறிவியல் நிறுவனம், உளவியல் நிபுணர்கள், மாநில அரசுகள், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர்.

பரிந்துரைகள்

அவர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் விரிவான பாலியல் கல்வியை கட்டாயப் பாடமாக சேர்ப்பது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வை பாடத்திட்டத்தில் இணைப்பது ஆகிய பரிந்துரைகளை அளித்துள்ளனர். மேலும், ஆரம்ப வகுப்புகளிலிருந்தே உடல் பாதுகாப்பு, சுகாதாரம், உடல் உறுப்புகள் ஆகியவற்றை கற்பிப்பதும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Safe Touch & Unsafe Touch குறித்தும் சொல்லித்தரப்படும். இது தொடர்பான பாடத்திட்டத்தை NCERT உருவாக்கும் என பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

வல்லுநர் குழு

இந்த திட்டம் தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மாணவர்களின் முழுமையான வளர்ச்சி, வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் வகையில் தற்போதுள்ள இளம்பருவ கல்வி திட்டங்களை மறுஆய்வு செய்து வலுப்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே வாரத்திற்கு இரண்டு முறை, 15 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்காக தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த கல்வி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் பெற்றோர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று அந்த குழு வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளின் வயதுக்கேற்ற பாலியல் கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விரிவான பாலியல் கல்வி என்றால் என்ன?

விரிவான பாலியல் கல்வி என்பது வெறுமன பாலியல் உறவு சார்ந்து சொல்லி தருவது இல்லை. மாறாக உடல் மாற்றங்கள், பருவமடைதல், தனிப்பட்ட பாதுகாப்பு, உறவுகள், இனப்பெருக்க ஆரோக்கியம், இணைய பாதுகாப்பு, எல்லாவற்றையும் விட குறப்பாக consent எனப்படும் பரஸ்பர சம்மதம் போன்ற பல்வேறு அம்சங்களை அறிவியல் அடிப்படையிலும் வயதுக்கேற்ற முறையிலும் கற்பிக்கும் கல்வி முறையாகும்.

குழந்தைகள் தங்களுக்கு எதிராக நடைபெறும் துஷ்பிரயோகங்களை அடையாளம் காணவும் அதை தைரியமாக புகார் அளிக்கவும் இந்த கல்வி உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாடத்திட்டங்கள் பாலியல் செயல்பாடுகளை ஊக்குவிக்காது. மாறாக மாணவர்களுக்கு இது சார்ந்த சரியான அறிவை மாணவர்களுக்கு வழங்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+