இங்க பாருங்களேன் அதிசயத்தை! இரட்டையர்களுக்கு ஒரே மாதிரி ரேகை.. கருவிழி? குழம்பிப் போன சென்சார்ஸ்

Subscribe to Oneindia Tamil

தேனி: ஆதார் கார்டில் கைரேகை மற்றும் கருவிழி பதிவாகாததால் கல்வி உதவித்தொகை பெற முடியாமல் தவிக்கும் இரட்டை சிறுமிகள் தவித்து வருகின்றனர். சிறுமிகளின் கருவிழி மற்றும் கைரேகை ஒன்றாக இருப்பதால் ஆதார் இணையத்தில் பதிவு நிராகரிக்கப்படுவதாக இ சேவை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் இரட்டை சிறுமிகள் முறையிட்டுள்ளனர்.

தேனி அருகே அல்லிநகரம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பையா இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. 15 வயதான இரட்டை சிறுமிகளின் ஆதார் கார்டில் தங்களது கை ரேகை மற்றும் கருவிழி பதிய முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

தேனியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் இரட்டை சிறுமிகள் தங்களது பள்ளி அரசு உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் கார்டு கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்வதற்காக இ சேவை மையம் சென்றுள்ளனர்.

Twin Girl Aadhaar Biometric

இரட்டை சிறுமிகள்

ஆனால் ஆதார் சேவை இணையதளத்தில் கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்ய முடியாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தபால் அலுவலகம், மதுரை ஆதார் சேவை மைய அலுவலகத்திற்கும் சென்ற போதும் இதே நிலை நீடித்துள்ளது. சிறுமிகளின் கருவிழி மற்றும் கைரேகை ஒன்று போல் இருப்பதால் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பெங்களூர் ஆதார் மைய அலுவலகத்திற்கு செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிறுமிகள் தெரிவித்தனர.

ஆதார் அப்டேட்

ஏழ்மை நிலையில் உள்ள தங்களால் பெங்களூர் சென்று ஆதார் பதிய முடியாத நிலை இருப்பதாகவும், இதனால் தங்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதில் பாதிப்பு ஏற்படுவதாகும், இதனால் தங்களால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆதார் கார்டில் தங்களது கைரேகை மற்றும் கருவிழியை பதிவு செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரட்டை சிறுமிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கைரேகை

பெரும்பாலும் இரட்டையர்களாக இருந்தாலும் அவர்களின் கைரேகையும் கருவிழியும் வேறு மாதிரி தான் இருக்கும். காரணம் மரபணுக்கள். மரபணு ஒன்று போல் இருந்தாலும் கை ரேகைகள் ஒரே மாதிரியாக பெரும்பாலும் இருப்பதில்லை. தாயின் கருப்பையில் கரு வளரும் போது ஏற்படும் சிறு மாற்றங்கள், கருவின் நிலை, அம்மனோட்டிக் திரவத்தின் அழுத்தம் போன்ற காரணிகளால் கைரேகைகள் நுணுக்கமாக தனித்துவமான வடிவங்களை பெறுகின்றன.

கருவிழி

இதனால் இரட்டையார்களாக இருந்தாலும் இருவரது கைரேகையும் வேறு மாதிரி தான் இருக்கும். அதே நேரத்தில் சில சிக்கலான வழக்குகளில் பெரும்பாலும் ஒத்துப் போவது போல கைரேகைகள் இருக்கும். அதனை மிகுந்த நுணுக்கத்துடன் கவனிக்க வேண்டும். சில நேரங்களில் ஆதார் போன்ற அரசு சலுகைகளை பெற கைரேகைகள் பதியும் போது அதில் குழப்பம் ஏற்படலாம். பெரும்பாலும் விரல்களின் வரி மற்றும் சுழல்களைப் பொறுத்துதான் ரேகைகள் தீர்மானிக்கப்படுகிறது.

பெங்களூரு ஆதார் மையம்

அதனால், ஒருவருக்கொருவர் ஒரே மாதிரி நிச்சயம் இருக்காது. சிலருக்கு இதே போல் சிக்கலாக அமையலாம். ஆனால் மிக மிக உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே ரேகைளில் வித்தியாசம் இருப்பதை கவனிக்க முடியும். சிறுமிகள் விவகாரத்திலும் இதே நிலைதான் இருக்கிறது. அவர்களது ரேகை தனித்துவமாக இருந்தாலும் சென்சார்கள் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு சில ஒற்றுமைகள் இருக்கிறது. அதனால் தான் பயோமெட்ரிக் பிரச்சனை எழுந்திருக்கிறது. பெங்களூரு ஆதார் மையத்துக்கு சென்றால் அங்கு தனித்தனியாக 20 இருவரது ரேகைகளையும் பிரித்துப் பார்க்க முடியும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+